பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் : கங்கை அமரன்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:285

தேதி:15-05-2023

புத்தகம் எண்ணிக்கை:285    

புத்தகத்தின் பெயர் : பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் 

ஆசிரியர் : கங்கை அமரன் 

பாகங்கள்: 3 

பக்கங்கள் :701 

விலை: 150 

பதிப்பகம் : நக்கீரன் வெளியீடு 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*கங்கை அமரன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல் ஆகும்

 

* நக்கீரன் வார இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது தற்போது வரை மூன்றுக்கும் மேற்பட்ட பாகங்கள் வெளியாகி உள்ளது 

 

*ரொம்ப நல்ல நாள் ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பிக்கிறோம் மனசுல இருந்தா என்னுடைய வாழ்க்கை பதிவுகள் புத்தக வடிவில் வருகிறது என்றார் கங்கை அமரன் 

 

*இளையராஜாவின் இசைஞானத்தை விமர்சனம் கலந்து எழுதியுள்ளார் கங்கை அமரன் 

 

*பாரதிராஜாவின் படைப்புலகம் தனி உலகம் கங்கை அமரன் எழுத்து அழகாய் காட்டுகிறது

 

* எம்ஜிஆர், சிவாஜி என்கின்ற இரு இமயங்களுடன் அவர்களின் செல்லப்பிள்ளை போல் பழகி அனுபவத்தை கங்கை அமரன் எழுதியுள்ள விதமே படிக்க படிக்க சுவையானது 

 

*அன்னக்கிளி முதல் நாள் அனுபவம் தொடங்கி எம்ஜிஆர்ருக்கு கதை சொன்ன வரைக்கும் ஏராளமான அருமையான வாழ்க்கைச் சம்பவங்களை கங்கை அமரன் சுவையாக சொல்லி உள்ளார். 

 

*கங்கை அமரன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பு மன உறுதி அசாத்தியான திறமை ஆகியவற்றை நூலை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் 

 

*அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு ரொம்ப ரொம்ப கெட்டுப் போச்சு என்ற பாடல் அரசியல் உலகில் மாபெரும் புரட்சியை உண்டாக்கியது 

 

*அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது எம்ஜிஆர் அவர்கள் கங்கை அமரனை அழைத்து பாட்டிற்கு விளக்கம் கேட்டது படிக்கும் போது ஒரு பாடல் என்னவெல்லாம் செய்யும் என உணர முடிகிறது 

 

*எம்ஜிஆரிடம் கைக்கடிகாரம் பரிசாக பெற்ற நிகழ்ச்சியும் அந்த கடிகாரத்தை இன்று வரை பத்திரமாக வைத்துள்ள நிகழ்வையும் உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ளார் 

 

*வெங்கட் பிரபு வயதுக்கு ஏற்ற தங்கச் சங்கிலி எம் ஜி ஆர் பரிசாகத் தந்ததை எண்ணி வியக்கிறார் 

 

*நடிகர் ராமராஜன் நடிகை நளினி காதல் திருமணத்தை எம்ஜிஆர் நடத்தி வைத்த நிகழ்வை அழகாக எழுதியுள்ளார் 

 

*தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு தகவல்களை வித்தியாசமான நடையில் எளிமையான முறையில் அழகாய் பதிவு செய்துள்ளார் 

 

*இந்நூலை படிக்கும் போது கங்கை அமரனுக்கு பின்னால் வாழ்க்கையில் நடந்த மகிழ்களும் துயரங்களும் நம் கண் முன்னே வருகிறது 

 

*வாழ்க்கை வரலாற்று நூல்களில் இது ஒரு வித்தியாசமான நூல் ஆகும் 

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*


*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

 

Post a Comment

0 Comments