தினம் ஒரு புத்தகம் - பொன்னியின் செல்வன்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:258

தேதி:19-04-2023

புத்தகம் எண்ணிக்கை:258   

புத்தகத்தின் பெயர் : பொன்னியின் செல்வன் 

ஆசிரியர்: கல்கி 

பதிப்பாசிரியர் : எஸ்.கௌமாரீஸ்வரி விலை:400        

பக்கங்கள்:2268 

பதிப்பகம்:சாரதா பதிப்பகம்


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          

 

*சோழ வம்சத்தில் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் பராந்தக சோழர்.இவருக்கு மூன்று புதல்வர்கள்.

 

1)இராஜாதியர்.

 

2)கண்டாராதித்தர்.

 

*3)அரிஞ்சய சோழர்.

 

 *இராஜாதியர் போரில் இறந்து விடுகிறார்.

 

*கண்டாராதித்தருக்கு குழந்தை இல்லை இவர் தீவிர சிவ பக்தர்.

குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் அந்த குழந்தை பெயர் மதுராந்தகர்.

இதில் இன்னொரு கருத்தும் உண்டு அவருக்கு காலம் சென்று குழந்தை பிறந்தது அதுதான் மதுராந்தகர் என சொல்வதுண்டு.

 

*அரிஞ்சய சோழருக்கு ஒரு பையன் அவர் பெயர் சுந்தர சோழர்.

 

*இந்த சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள் 

 

1)ஆதித்த கரிகாலன்

 

2)குந்தவை

 

3)அருண்மொழி வர்மன் என்கிற இராஜராஜச்சோழன்.

 

*சுந்தர சோழர் அருகில் இரண்டு முக்கிய தளபதிகள் உண்டு இவர்கள் பெரிய பழுவேட்டரையார்,சின்ன பழுவேட்டையார்.

 

*பெரிய பழுவேட்டையார் அறுபது வயது ஆனவர் என்றாலும் உடம்பு வைரம் போல,உடம்பில் பல வீரத்தழும்புகளை பெற்றவர், கிழட்டு சிங்கம் அவர் தம்பி சின்ன பழுவேட்டையார் அண்ணன் சொல் மீறாத தம்பி.

 

*அப்பாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள் என்பதால் மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது அதனால் காஞ்சியிலே தங்கி விடுகிறார்.

 

.*அதேபோல் குந்தவைக்கும் இவர்களை பிடிக்காது.

 

*ஈ.ழத்தில் இருக்கும் பிரச்சனையை சரிசெய்ய சென்று சரி செய்த பிறகு அங்கேயே தங்கி விடுகிறான் அருண்மொழிவர்மன்.

 

*இராஜராஜச்சோழன் ஈ.ழம் செல்ல முக்கிய காரணம்,சோழ தேசத்தின் விசுவாசி கொடும்பாளூர் தளபதி பரந்தாகன் சிறிய வேளான் படையுடன் ஈ.ழம் செல்லும் போது படைகள் ஒன்று சேர்வதற்கு முன் பரந்தாகன் சிறிய வேளான் கொ.ல்லப்படுகிறார் இதன் பின் ஒளிந்திருந்த வீரபாண்டியனும் இலங்கை மன்னனோடு சேர்ந்து கொள்கிறான் இதனால் கோபம் கொள்கிற சோழ படைத்தளபதி ஆதித்த கரிகாலன் எல்லோரையும் காலி செய்கிறான்.

 

*மீண்டும் குகையில் ஒளிந்து கொள்கின்ற வீரபாண்டியனை இழுத்து வந்து வெ.ட்டப்போகிறான் அதை அவனுடைய மனைவி வேண்டாம் என கெஞ்சுகிறாள் அதையும் மீறி த.லையை வெ.ட்டி விடுகிறான்.இதை கண்ட வீரபாண்டியனின் மனைவி சபதம் ஏற்கிறாள்.இதன் பிறகு நடக்கும் களேபரங்களை ஒடுக்கத்தான் இராஜராஜச்சோழன் ஈ.ழம் செல்கிறார்.

 

*சோழ தேசத்தை ஒ.ழிப்பேன் என சபதம் ஏற்கும் வீரபாண்டியனின் மனைவிதான் நந்தினி.

 

*இந்த நந்தினி தன்னை யாரேன்று மறைத்து பெரிய பழுவேட்டையார் மனைவியாக சோழ அரண்மனையில் வாழ்கிறாள்.

 

*சுந்தர சோழர் நோய்வாய் படுகிறார்.வானில் துருவ நட்சத்திரம் தோன்றுகிறது. அடுத்த அரசர் யார் என சோழ தேதத்தில் குழப்பம் வருகிறது.பழுவேட்டையார்கள் அடுத்து புள்ளப்பூச்சியாக இருக்கும் மதுராந்தகரை அரசர் ஆக்கி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள்.

 

*இ.லங்கை போரில் கொ.ல்லப்பட்ட கொடும்பாளுர் தளபதி மகள் வானதியை,குந்தவை அரண்மனைக்கு அழைத்துச்சென்று தன் அருகிலே வைத்திருக்கின்றார்.இவர்தான் பின்னாளில் ராஜராஜச்சோழனின் மனைவியாகிறார்.

 

*உடம்பு முடியாமல் இருக்கும் தன்தந்தையை தன்னுடன் தங்கும்படி அழைப்பு விடுத்து அவருக்கு ஒரு ஓலையும்,தன் தங்கைக்கு ஒரு ஓலையும் கொடுத்து தன் நம்பிக்கையான தளபதியிடம் தஞ்சைக்கு கொடுத்து அனுப்புகிறான் ஆதித்த கரிகாலன்.

 

*அந்த தளபதிதான் வர்.ணர் கு.லத்தை சேர்ந்த வந்தியத்தேவன் அவன்தான் பொன்னியின் செல்வனின் கதாநாயகன்.அவன் ஓலையை எடுத்துக்கொண்டு  வீராணம் ஏரி வழியாக தஞ்சையை நோக்கி வரும்போது பொன்னியின் செல்வன் கதை ஆரம்பிக்கிறது.

 

*வரும் வழியில் தன் பால்ய நண்பன் கந்தன் மாறனை சந்திக்க கடம்பூர் சம்புவரையர் மாளிகை வருகிறான்.ஆனால் அவன் காணும் காட்சி வேறு மாதிரி இருக்கிறது.அரசரை மாற்ற சதி ஆலோசனை அங்கு நடப்பதை உணர்கிறான்.

 

*அங்கு ஆழ்வார்க்கடியான் என்ற வைணவரை சந்திக்கிறார்.

 

*இவன் ஒரு வீர வைரவர். சோழர் குலத்து முதல் மந்திரியான அனிருத்த பிரம்மராயருடைய ஒ.ற்றன்.

 

*இவன் வரும் வழியில் ஒரு நபரை சந்தேப்பட்டு பின் தொடர்கிறான் அங்கு ஒரு குழுவாக ஆதித்த கரிகாலனையும்,இராஜராஜச்சோழனை கொ.ல்ல திட்டம் போடுகிறார் அவர்கள் ரவிதாசன்,சோமன் உள்ளிட்ட பாண்டிய ஆபத்துதவிகள்.

 

*தஞ்சை சென்று சேரும் வந்தியத்தேவன் அரண்மனைக்குள் செல்ல முடியாமல் தவிக்கிறான் அவனுக்கு ஒரு பூ விற்கும் தம்பி உதவுகிறான் அவன் பெயர் சேந்தன் அமுதன்.

 

*பல இன்னல்களுக்கிடையே சுந்தரச்சோழனிடமும்,குந்தவையிடமும் ஓலையை சேர்க்கிறான் வந்தியத்தேவன்.குந்தவையின் உத்தரவுக்கிணங்க அவர் கொடுத்த ஓலையுடன் இராஜராஜச்சோழனிடம் கொடுக்க ஈ.ழம் கிளம்புகிறான் வந்தியத்தேவன்.

 

*வந்தியத்தேவன் ஈ.ழம் செல்ல கோடியக்கரையில் உதவி செய்யும் பெண்ணின் பெயர் பூங்குழலி.

 

*இந்த பூங்குழலி,தஞ்சையில் வந்தியத்தேவனுக்கு உதவி செய்த சேந்தன் அமுதன் முறைப்பெண்.

 

*இலங்கை சென்று இராஜச்சோழனை கண்டு ஓலையை கொடுக்கிறான்.இதனடியே பழுவேட்டையார்களும் இராஜராஜசோழனை அழைத்து வர கப்பல் அனுப்புகிறார்கள்.

 

*அந்த கப்பலில் வந்தியத்தேவனும்,இராஜராஜனும் வரும்போது கோடியக்கரை அருகே கப்பல் புயலில் மாட்டுகிறது இதில் மூர்ச்சையான இருவரையும் பூங்குழலி காப்பாற்றி நாகை புத்தவிகாரையில் சேர்க்கிறாள்.

 

*இராஜராஜச்சோழன் புயலில் சிக்கி இறந்துவிட்டதாக சோழ தேசம் எங்கும் செய்தி பரவுகிறது.மக்கள் கொதிப்படைகிறார்கள் இதற்கு பழுவேட்டையார்கள் காரணம் என நினைக்கிறார்கள்.

 

*ரகசியமாக தம்பி காண புத்தவிகாரைக்கு வரும் குந்தவை,வந்தியத்தேவனிடம்,ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் அல்லது மீறி வந்தால் அவர் உயிரை பாதுகாக்க வேண்டும் என அனுப்புகிறார்.

 

*ஆதித்த கரிகாலனை பழிவாங்க துடிக்கும் நந்தினி நயவஞ்சமாக கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரவைக்கிறார்.

 

*நந்தினி மேல் ஆதித்த கரிகாலனுக்கு ஒரு மயக்கம் உண்டு.

 

*கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் வைத்து ஆதித்த கரிகாலன் ப.டுகொலை செய்யப்படுகிறான்.கொன்றவர்கள் பாண்டிய ஆபத்துதவிகள் இவர்கள் நந்தினின் ஆட்கள்.ஆதித்த கரிகாலனை காப்பாற்ற முடியவில்லையே என வந்திய தேவன் மனவேதனை அடைகிறான்.

 

*ராஜராஐசோழன் பதவி ஏற்கிறான் ஆதித்த கரிகாலன் சாவிற்கு காரணமானவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்குறான்.

 

* மிகச்சிறப்பாக மக்கள் விரும்பும் விதம் ஆட்சி செய்கிறான்.

 

           *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments