*தினம் ஒரு புத்தகம்* - குறிஞ்சித்தேன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:219

தேதி:11-03-2023

புத்தகம் எண்ணிக்கை:219

புத்தகத்தின் பெயர் : குறிஞ்சித்தேன்

ஆசிரியர் : ராஜம்கிருஷ்ணன்

பக்கங்கள் :400

விலை : 180

பதிப்பகம்: பாரத்பதிப்பகம் 

 

*சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்

என்ற சிறப்பிற்குரியது 

 

*குடும்பப் பாங்கான சமூக நாவல்களையே அடிப்படையாகக்  கொண்டு எழுதும் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

*நீலகிரி மலையில் வாழும் படுகர் இன க்களின் வாழ்வியலை அழகாக எடுத்துக் காட்டும் நூலே இது. 

 

*“குறிஞ்சித் தேன் என்ற தலைப்பு இந்நூலுக்கு மிகப்பொருத்தமாகப் பொருந்துகிறது.

 

 

* ஒரு குடும்பத்தைப் பிண்ணனியாக கொண்டு நாகரிக மாற்றத்தில் படுகர் இனக்குழுவில் ஏற்படும் நாகரிக மாற்றங்களை அழகாக பதிவு செய்துள்ளது

 

*12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலரின் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு நாவலை பயணிக்கச் செய்த விதம் சிறப்பாக அமைந்துள்ளது

 

*ஜோகி, ரங்கன், கிருஷ்ணன், பாரு என்ற சிறுவர்களின் அறிமுகத்துடன் தொடங்கும் முதல் அத்தியாயம் சிறுவர்கள் குறித்தான நாவலோ என்ற சிந்தனையை எழச் செய்தது. ஆனால் இந்த நான்கு கதாபாத்திரங்களைப் பிரதானமாகக் கொண்டு நாவல் விரிந்த விதமே மிக மிக இயல்பானது.

 

*படுகர் குடிக்குள் பொருளாதார நிலையிலும் குடும்பச் சூழலிலும் மாறுபட்ட மூவரின் வாழ்க்கையை குறிஞ்சித்தேன் சொல்கிறது. 

 

*ஐந்து குறிஞ்சி (5×12=60அறுபது) ஆண்டுகள் அவர்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் கூடவே நீலகிரியில் நடக்கும் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களும் கூறப்படுகின்றன. 

 

*நீலகிரி மலையில் மரகத மலை ஹட்டியில் படுகர் இனத்தைச்சேர்ந்த ஜோகி, ரங்கா, கிருஷ்ணா மூவரும் வாழ்கின்றனர். மூவரும் இந்திய சுதந்திரத்தை ஒட்டிய மாற்றங்களால் காடுகள் அழிந்து நவீனவாழ்க்கை உருவாகும் போக்கில் பலவகை வாழ்க்கை மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். 

 

*நஞ்சன் விஜயா என்னும் இளைஞர்களின் காதல் ஊடாக வளர்ந்து முழுமையடைகிறது

 

*இந்நாவல் தமிழில் பழங்குடி இனத்தவரைப் பின்னணியாகக்க்கொண்டு எழுதப்பட்ட முதல் படைப்பு. 

 

*பல செய்திகளை ஆசிரியர் தொகுத்து அளித்திருக்கிறார். வளர்ச்சிப்பணிகளால் வன அழிவு நிகழ்வதை ஆவணப்படுத்துகிறது.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments