சிதறிய சிந்தனைகள் - ஆசிரியர் : யாரோ ஒருவன்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:270

தேதி:01-05-2023

புத்தகம் எண்ணிக்கை:270   

புத்தகத்தின் பெயர் :சிதறிய சிந்தனைகள் 

ஆசிரியர் : யாரோ ஒருவன் 

பக்கங்கள் : 95 

விலை : 100 

பதிப்பகம் : U 2 Write

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*இந்தப்புத்தகத்தின் அட்டைப்படமே நம்மைக் கவரும் விதத்தில் உள்ளது 

 

*மனிதனுக்கு தலையாய உறுப்பு தலை அந்த தலைக்கு தலைக்குள் சிந்தனைகள் மேல் நோக்கியும் பக்கவாட்டை நோக்கியும் துளிர் விடுவதாய் அமைந்துள்ளது. நமது சிந்தனைகள் மேல் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ இருக்க வேண்டும் கீழ்நோக்கி அல்ல என்பதை சொல்லாமல் சொல்வதைப் போல் உள்ளது 

 

*இந்த  அட்டைப் படத்தை வடிவமைத்தமைக்காக  எழுத்தாளரைப் பாராட்டலாம் 

 

*"எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் "என்ற பாடல் வரிகளை போல் இந்த புத்தகத்தை எழுதியவர் யாரோ ஒருவன் என்று இருக்கிறது அதேபோல் யாரோ ஒருவன் பற்றிய குறிப்பு எங்கேயும் இல்லை. ஆசிரியர் தன்னை வெளிக்காட்டாத படைப்பு அருமை.

 

*ஆசிரியர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன்னுடைய சிந்தனையில் உதித்த சிறுகதைகளை முன்னிலைப்படுத்திய விதம் அருமை 

 

*இந்தப்புத்தகத்தில் மொத்தம் ஆறு சிறுகதைகள் உள்ளன ஒவ்வொன்றும் ஒரு விதம் அனைத்தும் மன உணர்வுகளை பிரதிபலிக்கின்றன

 

* இந்தப்புத்தகத்தின் கட்டமைப்பின் சிறப்பு எழுத்துக்கள் 

 

*எழுத்துக்கள் பெரிய அளவில் உள்ளது நன்றாக உள்ளது .இரவில் மற்றும் பயணங்களில் படிப்பதற்கு ஏற்றவாறு உள்ளது.

 

*கதைகள் அனைத்தும் தெளிந்த ஆற்று நீர் தன் வழியே செல்வது போல் ஆசிரியர் தனது சிந்தனைகளை தனது எண்ணப்படியே மிக அழகாய் வெளிக்காட்டிய விதம் சிறப்பாக உள்ளது 

 

*தெளிவான எதார்த்த வாழ்வின் உரையாடல்களை கொண்ட எழுத்து நடைக்கு மீண்டும் ஆசிரியரை பாராட்டலாம் 

 

*முதல் கதை பசி படிக்கும் போது குழந்தையோடு குழந்தையாகி விடுகிறது மனம் 

 

*இன்றைய அவசர உலகில் பசி ,எச்சில் இலை ,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர் நிலை அறியா குழந்தை மனதை அழகாய் வெளிக்காட்டி உள்ளார் 

 

*நாமும் குழந்தையாகவோ இருந்திருக்கலாமோ என நம்மை என்ன வைத்து விடுகிறார் 

 

*90 காதல் மிக மிக அருமை இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கை சுழற்சியை படம் பிடித்து காட்டுகிறார் 

 

*திரைப்படம் பார்த்த உணர்வு இந்தக்கதையினை மேலும் விரிவு படுத்தினால் நாவலாக மாற்றலாம் 

 

*நாவலை ஒரு குறிப்பிட்ட ஊர் பகுதியை தேர்ந்தெடுத்து அந்த ஊரின் பேச்சு வழக்குகளில் பேச்சு வழக்குகளை நாவலில் கொண்டு வந்தால் கண்டிப்பாக விருது பெரும் நாவலாக படைக்கலாம் 

 

*வித்தியாசமான விரி சிந்தனை நாய் கதை சொல்வதைப் போல் மனநிலை கதையைப்படைத்துள்ளார்

 

*மிக மிக அருமை இந்தக் கதை இன்னும் படங்களோடு விரிவு படுத்தினால் கண்டிப்பாக சிறந்த சிறார் நாவலாக மாறும் என்பது உறுதி 

 

*என்ன தவம் செஞ்சுப்புட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்பட்டோம்என்று அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் பாடலை உடனே நினைவுக்கு கொண்டு வருகிறது வாசப்படி கதை 

 

*பிரிவின் வலி படிக்கும் போது தன் குடும்பத்திற்காக தனது மகிழ்ச்சி ,ஆசை அனைத்தையும் விட்டுவிட்டு சென்னை ,திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் குடும்பத்திற்காக வாழும் இளைய தலைமுறையின் தியாக மனம் ஞாபகத்திற்கு வருகிறது 

 

*பிரிவின் வலி மனதை கண்ணீர் விட வைக்கிறது இது ஆசிரியருக்கு கிடைத்த வெற்றி 

 

*30 வயதில் 60 கல்யாணம் என்ற கதையைப் படிக்கும் போது 

 

*போலி நளன்களின் கூட்டம் 

கையில் மாலையுடன் 

குருட்டுத் தமயந்தி 

என்ற அப்துல் ரகுமானின் கவிதை நினைவுக்கு வருகிறது 

 

*இன்றைய உலகில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை கனத்த இதயத்தோடு குடும்பத்திற்காகவும் செய்யும் இளைஞர்களை பெண் வீட்டார்கள்  பெண் பார்க்கும் போது கேட்கும் முதல் கேள்வி அரசு வேலையா பையனுக்கு .?என்பதிலே அவர்களின் திருமணக்கனவு கலைந்து விடுகிறது என்பதை உணர்த்துகிறது 

 

*சிறுகதையின் வார்த்தை ஜாலங்கள் இல்லை வர்ணனைகள் இல்லை கதைக்களம் நிகழ்வுகளை கதாபாத்திரங்கள் பேசுவது போல் அதற்குரிய வார்த்தைகளில் வடிவமைத்த உள்ள விதம் அருமை 

 

*சிறுகதைகளை படித்த பிறகு நமது மனதில் மீண்டும் மீண்டும் கதை நடைபெறும் களம்,கதை மாந்தர்கள் நினைவுக்கு வருகிறார்

 

* இந்த சிறுகதையின் மற்றொரு சிறப்பு ஒவ்வொரு கதையின் முடிவிலும் கதையின் மையக்கருத்தை அழகாக ஒருவரி கவிதை போல் ஒருவரியில் எழுதியுள்ளார் அது ஒரு சிறப்பான புதிய முயற்சி வாழ்த்துக்கள்

 

* இந்நூலில் உள்ள சிறுகதைகளை நாவலாக விரிவு செய்ய முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக சிறப்பாக அமையும் 

 

*ஒரு மன நிறைவான சிறுகதைகளை படித்த அனுபவம் கிடைத்தது

 

* உங்களுக்கு ஒரே ஒரு அறிவுரை எவனோ ஒருவனை பற்றி கண்டிப்பாக நூலில் கொடுக்கவும் இது வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கமாகவும் உற்சாகமாகவும் அமையும

 

* உங்கள் சிந்தனைகளை விரிவு செய்யுங்கள் நிறைய படியுங்கள் மேலும் பல கதைகள் ,கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்.

               

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள தினம் ஒரு புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments