*தினம் ஒரு புத்தகம்* - வாழ்க்கையை ஒரு வழிபாடு

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:221

தேதி:13-03-2023

புத்தகம் எண்ணிக்கை:221

புத்தகத்தின் பெயர்: வாழ்க்கையை ஒரு வழிபாடு 

ஆசிரியர் :வெ.இறையன்பு 

பதிப்பகம் :விஜயா பதிப்பகம் 

பக்கங்கள் :194 

விலை :200 

 

*வாழ்க்கையை ஒரு வழிபாடு நூலில் வாழ்க்கையின் மகத்துவத்தை ஒரு வாழ்க்கையை எப்படி கொண்டாடி மகிழ்வது என்பதையும் மிக அருமையாக ஆழமாக அவருடைய நடையில் இறையன்பு அளித்துள்ளார் 

 

*இந்தப்புத்தகத்தில் மொத்தம் 25 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு இல்லறமும் அறமே மற்றும் கல்வியும் கடவுளும் தன்மையும் ஆகும் 

 

*காற்றிலும் இறைமை 

கடலிலும் இறைமை 

முற்றிலும் இறைமை 

முள்ளிலும் இறைமை 

ஒளியிலும் இறைமை 

ஒளியிலும் இறைமை 

இறைமை என்பது இருத்தல் முழுமையும் மனிதன் என்பவன் இறைமை சுட்ட சுருக்கொப்பம்

 

*ஒவ்வொரு மனிதனிடமும் புத்தனும்உண்டு எத்தனும் உண்டு? விருப்பமானவரை வெளிக்கொணர்கின்றனர் வேண்டியதைதேர்ந்தெடுக்கின்றனர் 

 

*முதல் குழந்தை பிறக்கும் போது ஒரு தாயும் பிரசவமாகிறாள்என்றால் ஓஷோ 

 

*குழந்தை மனிதனின் தந்தை என்றார் வோட்ஸ்வொர்த்

 

* தாயும் தந்தையும் ஒரு குழந்தையைப்பிறப்பிக்கிறார்கள் ஆனால் ஒரு குழந்தை தாய் தந்தை இருவரையும் பிரசவிக்கிறது 

 

*உணவை உரிய முறையில் உண்டால் அது உபாயம் வழி தவறிவிட்டால் அதுவே அபாயம் 

 

*இறைமை மொழிகளைக் கடந்து புலன்களைத்தாண்டி எண்ணங்களை மீறியது 

 

*மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி எது அதனிலும் மகத்துவம் பெற்ற உரையாடல் அது

 

*கவலைகள் அற்ற மனம் வேண்டும் ஆசைகள் அற்ற இதயத்துடன் பயிற்சியை தொடங்க வேண்டும் 

 

*கருணையின் மூலமே கடவுளை அடையாளம் அன்பின் மூலமே கருணையை உணரலாம் 

 

*இந்தப்புத்தகம் படிக்க படிக்க மனம் அமைதி நிலைக்கு சென்று விடுகிறது மனதில் ஏதோ ஒரு வித அமைதி நிலை ஏற்படுகிறது கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய நல்ல புத்தகமாகும் 

 

*இந்தப்புத்தகத்தில் ஜென் தத்துவங்கள், கதைகள்,ராமகிருஷ்ணர்,விவேகானந்தர் ,காந்தி ,ஷேக்ஸ்பியர் மற்றும் பல அறிஞர்களின் கருத்துக்களையும் தத்துவங்களையும் இந்நூலில் ஒவ்வொரு கட்டுரையிலும் கொடுத்துள்ளார் இதுவும் இதற்கு ஒரு தனி சிறப்பாகும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments