*தினம் ஒரு புத்தகம்* - தம்மபதம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:188

தேதி:30-01-2023

புத்தகம் எண்ணிக்கை:188

புத்தகத்தின் பெயர்: தம்மபதம் 

ஆசிரியர் :யாழன் ஆதி

பக்கங்கள் :152 

விலை : 150 

பதிப்பகம் : எதிர் வெளியீடு 

 

*தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது 

 

*திரிபீடகங்களாகத்  தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்ம பதம் சுத்த பீடாகத்தில் குந்தக நியாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது 

 

*மனித வாழ்க்கைக்குத்தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியான கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் 

 

*தமிழில் பலமொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக்கூறலாம் 

 

*மனதை தொட்ட சில தம்மபதம் கருத்துக்கள் 

 

*தீயோருடன் இணைந்திருக்க வேண்டாம் நல்லோரிடம் 

பிரிந்திருக்க வேண்டாம் 

 

*குற்றத்தை சுட்டிக்காட்டும் 

அறிவரைப்பின்பற்ற வேண்டும் புதையலைக்காட்டும் 

வழிகாட்டியைப்பின்பற்றுவதைப் போல 

 

*தன்னை நேசிக்கும் ஒருவர் 

தன்னைக்காப்பார் 

தானே விழிப்பின் இருந்து 

தன்னை காப்பவரே அறிவர் 

 

*ஆசையிலிருந்து துன்பம் ஆசையிலிருந்து பயம் 

ஆசையிலிருந்து விலக்கியவர்களுக்கு துன்பங்கள் ஏதுமில்லை 

அச்சம் இல்லவே இல்லை 

 

*பேச்சையும் 

நினைப்பையும் 

தன்மையும் 

கட்டுப்படுத்துவார்கள் 

அறிஞர்கள்

 

* உடலால் 

மொழியால் 

மனதால் 

தீமை செய்யாமல் 

அடக்குபவரே அறவோர்

 

* எல்லாத்தடைகளையும் 

தகர்த்தவர் பயமற்றவர் 

பற்றுக்களை தாண்டியவர் தீயவற்றிலிருந்து விலகியவர்

     

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments