கூகை ஆசிரியர்: சோ தர்மன்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:268

தேதி:29-04-2023

புத்தகம் எண்ணிக்கை:268    

புத்தகத்தின் பெயர் :கூகை 

ஆசிரியர்: சோ தர்மன் 

பக்கங்கள் :320 

விலை :300 

பதிப்பகம் : அடையாளம்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை மிகுந்த வலிமை கொண்டது. எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை. 

 

*இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது. பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும். கூகையின் தோற்றத்தை அருவருப்பாகப் பார்ப்பதும், கோரம் என்று முத்திரை குத்துவதும், கூகையைக் காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும் இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் பொதுப்புத்தி, கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றிகண்டிருக்கிறார் சோ. தர்மன்.

 

*வாசிக்கையில் நம்மை உணர்ச்சிவயப்படுத்தும் தருணங்கள் நாவல் முழுக்க வந்து கொண்டே இருக்கின்றன. 

 

*சோ. தர்மன் அவர்களின் எழுத்துஉயிரோட்டமுள்ள கிராமத்தினையும் கிராம மக்களையும் கண் முன்னே நிறுத்துகிறது.

 

*முட்டாள் பறவை என நம்பப்படும் கூகையை சாமியாக ஏற்றுக்கொண்டு கோவில் கட்டி கும்பிடும் மக்கள், கூகையை சாமியாக ஏற்றுக் கொண்டவர்களின் நம்பிக்கையை எள்ளிநகையாடும் இளவட்டங்கள், தொடர்ந்து இழைக்கப்படும் சாதிய ஒடுக்குதல் மற்றும் இனாமாக கிடைக்கும்  கோதுமைக்கும் கிறிஸ்துவத்தைக் ஏற்றுக் கொள்ளும் மக்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தில் கூலி ஏதும் இல்லாமல் அவ்வப்போது தாழ்த்தப்பட்ட மக்களை வேலைக்கு வர சொல்லி நிர்பந்திக்கும், தாழ்த்தப்பட்டவர்களின் மனைவி, மகள், அக்கா என பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் மேற்சாதிக்காரர்கள் என நாவல் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

 

*சோ.தர்மனின் எழுத்து சில இடங்களில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

 

*ஒரு திரைக்கதை போலவே கதை விறுவிறுப்பாக நகர்கிறது. 

 

*“நீச்சலடிக்கத் தெரியாதவன் கெணத்துல விழுந்திட்டா அப்பிடியே செத்துப்போக மாட்டாண்டா, கடைசிமூச்சு இருக்கிற வரைக்கு கையக்கால ஒதறிப் போராடி சோர்ந்துப்போயி பெறகுதாண்டா சாவான்

 

*நாவலின் எழுத்து நடை மண்சார்ந்து நம்மை அந்நிகழ்விற்கே ஈர்த்து விடுகிறது

 

*நாவலின் எழுத்தோட்டம் நடைபெறும் சூழலுக்கே நம்மை கொண்டு செல்கிறது

 

*ஒரு கட்டம் வரைக்கும் விளங்கிக்கொள்ள கடினமா இருந்தாலும் பிறகு முழுமையாக உள்ளே வைத்து சாதியத்தின் அத்தனை கோரமுகங்களையும் கண்முன் காட்டிச்செல்கிறது.

 

*கூகையோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தை ஒப்பிட்டு நாவல்முழுக்க கூவை படும் துன்பங்களை சொல்லுகிறார். 

 

*சீனி என்ற கதாபபாத்திரத்தின் பொறுமை ஆளுமை தாழ்த்தப்படுகின்ற அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. 

 

*பேச்சி என்ற பெண் பாத்திரம் மனதோடு பயங்கரமா ஒட்டிப்போய்விட்து.

 

*சில நாவல்களைப் படிக்கும் போது தான் மனித குலத்திற்கு மனித குலமே செய்யும் அநீதிகளை அறிந்து கொள்ள முடிகிறது

 

*நமது கண்களில் கண்ணீரும் இரத்தமும் வரவழைக்கும் படைப்புகளில் இதுவும் ஒன்று

                  

              *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments