*தினம் ஒரு புத்தகம்* - வியப்பூட்டும் வழிபாடுகள்

 




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:208

தேதி:28-02-2023

புத்தகம் எண்ணிக்கை:208

புத்தகத்தின் பெயர் : வியப்பூட்டும் வழிபாடுகள் 

ஆசிரியர் : கவிஞர் பெ. பெரியார் மன்னன் 

பக்கம் : 130 

விலை : 155 

பதிப்பகம் : விவேகா பதிப்பகம் 

 

*இந்நூல் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கிராமிய கோயில்கள் குறித்த தகவல்கள் அடங்கிய அரிய ஆவணம் என்றால் அதுமிகை ஆகாது 

 

*நாட்டார் வழிபாடு என்பது தொன்று தொட்டு வரும்  நமது மண்ணும் பண்பாடும் சார்ந்த நமது முறையாகும்

 

* வைதீக வழிபாட்டு முறைகள் செழித்தோங்கிய காலத்திலும் நாட்டார் வழிபாடுகள் தமது தனித்துவத்தை இழக்காமல் இன்று வரை கிராமங்களில் தொடர்ந்து வருகிறது 

 

*நமது பண்பாட்டின் வேர்கள் ஆழமாக ஊடுருவி மக்கள் மனதில் காலங்காலமாக வேரூன்றி வெளிப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது 

 

*52 கிராமிய கோயில்கள் பற்றியும் அவற்றின் வினோதமான வழிபாட்டு முறைகள் பற்றியும் அவற்றின் தனித்துவம் குறித்தும் எளிய நடையில் எழுதியுள்ளார் 

 

*ஆண்கள் மட்டும் வழிபடும் கோயில் 

 

*கல்வெட்டுக்கு கோயில் கட்டி வழிபடும் கோவில் 

 

*துறவிகளுக்கு கோவில் கட்டி வழிபாடு 

 

*ராமருக்கு பல்லக்கு தூக்கி வழிபடும் கோவில்

 

* அம்மன் கோயிலில் இஸ்லாமியர் சிலை வழிபாடு 

 

*வவ்வால்களுக்கு வழிபாடு செய்யும் கோவில்

 

*பேளூர் சிறுவர்களின் மார்கழி மாத வழிபாடு

 

* நேர்த்திக்கடன் தீர்க்கும் வழிபாடு 

 

*நோய் தீர்த்த பூசாரிக்கு கோவில்

 

*காலை தாண்டும் வழிபாடு சுவாமி 

 

*சுவாமி சிலைகளுக்கு விருந்து வைத்து வழிபாடு 

 

*முன்னோர்களின் வழியில் பழமையும் பாரம்பரியம் போற்றி பாதுகாக்கும் கிராமப்புற மக்களின் வழிபாட்டு முறைகள் பற்றிய தகவல்கள் உள்ளன

 

* இந்த நூலில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி சுற்றியுள்ள பகுதியிலுள்ள அரிய கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை தொகுத்து எழுதப்பட்ட இந்த நூல் ஒரு வரலாற்று பொக்கிஷம் ஆகும்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments