தினம் ஒரு புத்தகம் - தமிழ்க்களஞ்சியம்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:261

தேதி:22-04-2023

புத்தகம் எண்ணிக்கை:261      

புத்தகத்தின் பெயர்:தமிழ்க்களஞ்சியம் 

ஆசிரியர்: தமிழ் இனியன்

விலை:250

பக்கங்கள்:858

பதிப்பகம்:அறிவுக்கடல்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


*பொது தமிழ் மற்றும்  தமிழ் இலக்கிய வரலாறு உள்ளடக்கிய தமிழ்க்களஞ்சியம் இது அறிவுக்கடல் பதிப்பகத்தின் வெளியீடு ஆகும் 

 

*இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் தமிழ்இனியன்

 

*இந்தப்புத்தகம் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு சிறந்த புத்தகம் ஆகும் 

 

*டி என் பி எஸ் சி, டிஆர்பி ,யுஜிசி போன்ற தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம் ஆகும் 

 

*ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புதிய பாடத்திட்டத்தில் உள்ள தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது 

 

*தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் தொண்டு மற்றும் இலக்கணம் ஆகிய அனைத்து தகவல்களும் உள்ளடக்கியது 

 

*இந்தப்புத்தகத்தில் இலக்கியம் சார்பாக 10 தலைப்புகளும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டுகளும் சார்பாக 21 தலைப்புகளும் உள்ளது

 

* மேலும் கூடுதல் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது 

 

*இலக்கணம் சார்பாக 5 இலக்கணங்களும் கூடுதலாக ஒரு மதிப்பெண் வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது

 

* tnpsc தமிழ் தகுதித்தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவியாக அது குறித்த 21 தலைப்புகளில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது 

 

*இந்த புத்தகத்தில் ஒவ்வொரு நூல்கள் மற்றும் புலவர்கள் பற்றி ஒரு வரி தகவலாக முதலில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 

 

*தமிழுக்கு இது ஒரு சிறந்த களஞ்சியம் ஆகும் 

 

*தமிழ் சார்பாக எந்தத்தேர்வு எழுதினாலும் இந்தப்புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் அந்த அளவுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது

*உதாரணமாக 

 

*திருக்குறளில் இல்லாதது இல்லை சொல்லாததும் இல்லை 

 

*பதினொன் கீழ்க்கணக்கு நூல்களில் அதிக பாடல்களும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்

 

* திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல்

 

*அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு

 

*அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை

 

 * அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்

 

*அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை

 

*அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை

 

 *அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்

 

*அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்

 

*அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்  

 

 *ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்

 

* ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.

 

*ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி

 

*இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை

 

 *இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்

 

*இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments