*தினம் ஒரு புத்தகம்* - வரலாற்றுப் பாதையில்


 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:240

தேதி:01-04-2023

புத்தகம் எண்ணிக்கை:240             

புத்தகத்தின் பெயர் : வரலாற்றுப் பாதையில் 

ஆசிரியர் : த.ஸ்டாலின் குணசேகரன் பக்கங்கள் : 495 

விலை : 490 

பதிப்பகம் : நியூஸ் செஞ்சுரி புக் ஹவுஸ்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*கடந்த கால வரலாற்றைப்படிப்பதே எதிர்கால வரலாற்றைப்படைப்பதற்காக தான் 

 

*வரலாறு என்பது வெறும் வாசிப்பதற்கு மட்டுமல்ல வாசித்தவாறு வாழ்வது குறித்து யோசிப்பதற்காகவும் தான் 

 

*நாட்டுப்பற்று ,சமூக உணர்வு ,சேவை மனப்பான்மை ,மொழி உணர்வு, தியாகச் சிந்தனை ,கடின உழைப்பு ,தன்னம்பிக்கை ,மனிதநேயம் ,உலகப் பார்வை போன்ற பண்புகளை படிப்போர் மனதில் நெஞ்சில் பதிய வைக்கும் முயற்சியில் இன்னொரு சாதனையாளர்கள் விஞ்ஞானிகள் இலக்கியவாதிகள் தேசபக்தர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்கள் என அனைத்து செய்திகளையும் கொண்டதாக இந்நூல் அமைந்திருக்கிறது

 

* இந்நூல் ஜனசக்தி இதழில் கட்டுரைத்தொடராக வெளிவந்தது 

 

*வரலாற்று அறிவு வளமுடன் இருந்தால்தான் நிகழ்காலப் பாதையும் எதிர்கால விளக்கும் வருங்கால சந்தை சந்ததியினருக்கு தெளிவாக புலப்படும் 

 

*வரலாறு திரிக்கப்படுவதாலும் மறுக்கப்படுவதாலும் நமது நிகழ்கால வாழ்வில் எண்ணற்ற குழப்பங்கள் நிகழ்கின்றன எனவே மீண்டும் மீண்டும் வரலாற்றை பார்க்க வேண்டியதும் மறக்காமல் அடிக்கடி நினைவு கொள்ள வேண்டியதும் சிந்தனாவாதிகளுக்கு மிக மிக அவசியமான பணியாகிறது 

 

*இந்நூல் இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு வரலாற்று அறிவை வளர்க்க உதவி புரியும் 

 

*உலக, இந்திய ,தமிழக வரலாற்று நாயகர்களையும் நிகழ்வுகளையும் ஆதாரப்பூர்வமாக சுவைபட கூறுகிறது 

 

*இந்தக்கட்டுரைகள் வரலாற்றின் மீதும் தனிக்கவனம் செலுத்த நமது இளைஞர்களை தூண்டும் இக்காலத்தில் இது மிகவும் அவசியமான ஒரு நல்ல புத்தகம் ஆகும் 

 

*இந்த நூலில் மொத்தம் 118 கட்டுரைகள் உள்ளன 

 

*ஒவ்வொரு கட்டுரைகளும் படிக்க படிக்க விறுவிறுப்பாக உள்ளது 

 

*எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு காளிங்கராயன் கட்டிய கால்வாய் ,உயிர் பிரிந்தது கொடி பறந்தது ,கொடுமுடிக்குயில் கே. பி.சுந்தராம்பாள் ,நடிக்கத்தெரியாத நாடக  மேதை, எம்டன் ஆரோக்கியசாமி

                      

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments