கர்ணன்

 


தினம் ஒரு புத்தகமே

நாள்:273

தேதி:04-05-2023

புத்தகம் எண்ணிக்கை:273    

புத்தகத்தின் பெயர் : கர்ணன்

தமிழில் : நாகலட்சுமி சண்முகம்

 மராத்தி மூலம் :சிவாஜி சாவந்த் 

பக்கங்கள் : 864 

பதிப்பகம் :மஞ்சூள் பதிப்பகம் 

விலை: 899

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


* பொதுவாக கர்ணன் பற்றி நான் அறிந்தவை

 

*கர்ணன்  மகாபாரத காப்பியத்தில் இடம் மிக முக்கியமான கதாபாத்திரம்

*தானம் செய்வதில் சிறந்தவன் 

 

* தேரோட்டியின் வளர்ப்பு மகன் 

 

*சூரிய பகவான் அருளால் பிறந்தவன்

 

*கிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கர்ணன் கருதப்பட்டார்.

 

*கர்ணன் திறமையான போர் வீரனாகவும் பேச்சாளனாகவும் வளர்ந்தான். 

 

*துரியோதனனின் சிறந்த நண்பனாக விளங்கினான்.

 

*துரியோதனனால் அங்க நாட்டின்  அரசனாக ஆக்கப்பட்டான்

 

*குருச்சேத்திரப் போரில் கர்ணன் துரியோதனன் பக்கமிருந்து போரிட்டான். 

 

*பாண்டவர்களில் மூன்றாவதான அருச்சுனனைக் கொல்லும் திறமையுடையவனாக இருந்தும் அவனுடன் நடந்த சண்டையில் சூழ்ச்சியால் கர்ணன் கொல்லப்பட்டான்

 

* இந்த புத்தகத்தை படித்தவுடன் கர்ணன் பற்றி கூடுதலாக நான் அறிந்து கொண்டவை*

 

*கர்ணனைப் பற்றி மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய நாவல் ‘மிருத்யூஞ்ஜயா

 

‘கர்ணன்: காலத்தை வென்றவன் என்ற பெயரில் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். 

 

*மகாபாரதத்தில் திரௌபதிக்கு அடுத்து அதிகத் துயரங்களைச் சந்தித்தவன் கர்ணன். 

 

*ஒடுக்கப்பட்ட இனக்குழுவான சூதர்களின் பிரதிநிதியாகத் தன் குரலை சத்ரியர்களுக்கு எதிராக ஒலித்தவன். அந்தக் குரலைத் தற்காலக் குரலாகக் கேட்க வைத்திருக்கிறார் சிவாஜி சாவந்த்.

 

*மகாபாரதம் குறித்து எழுதப்படும் பனுவல்கள் அனைத்திலும் கர்ணன் இடம்பெறுவான். கர்ணனை அர்ஜுனன் கொன்றதற்கு நியாயம் கற்பிக்கும் அளவுக்கே கர்ணனுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். 

 

*சில நூல்கள  மட்டுமே கர்ணன் தரப்பு உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும். அவ்வகையில், கர்ணனின் பிறப்பு முதல் அவனது உடல் சிதையில் எரிவது வரையான முழு வரலாற்றையும் எழுதியிருக்கிறார் சிவாஜி சாவந்த். 

 

*மகாபாரதத்தில்  வருணாசிரமப் படிநிலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டவன் கர்ணன். 

அந்தப் பாதிப்பின் விளைவுகள் அவன் மரணம் வரை தொடர்கின்றன. 

 

*துரோணர், கிருபரின் புறக்கணிப்பால் சூரியனைக் குருவாக ஏற்றுக்கொள்கிறான் கர்ணன். சத்ரியர்களிடமிருந்து தன் திறமைக்குச் சிறிய அளவிலாவது அங்கீகாரம் கிடைக்காதா என்ற ஏக்கம் கர்ணனைத் தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. 

 

* பீஷ்மர் தன் இறப்பின் விளிம்பில் கர்ணனின் வீரத்தை அங்கீகரிக்கிறார்

 

*துரோணர் அதையும் செய்யவில்லை. துரோணரின் அங்கீகரிப்புக்காக கர்ணன் காத்திருந்தான் என்பதுதான் உண்மை. சத்ரியர்களைவிட ஏகலைவன்தான் தன்னுடைய சிறந்த சீடன் என்பதை குருஷேத்திரப் போர் துரோணருக்குப் புரியவைக்கிறது. 

 

*ஒரு மனிதன் இன்றைய காலத்தில் எதை வைத்து மதிப்பிடப்படுகிறான் என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது 

 

*கலை, இலக்கியம், அரசியல், கல்வி, பதவி, விளையாட்டு, விருது உள்ளிட்ட அனைத்திலும் இன்றும் கர்ணனைப் போல் தான் பலரும் புறக்கணிக்கப்படுகிறார்கள் 

 

* இந்த யுகம் அறிவியல் யுகம் என்றாலும் பழைய மரபுகள் சாதிய முறையிலான  தேர்வுகள் இன்னும் மறையவில்லை ஆங்காங்கே துள்ளிவிட்டுக் கொண்டுதான் உள்ளது

 

*மனதைக்கவர்ந்த வரிகள்*

 

*நினைவுகள் யானையின் பாதச்சுவடுகள் போன்றவை. நம் முடைய ஈரமான மனதில் அவை ஓர் ஆழமான அழிக்க முடியாத தடத்தை விட்டுச் செல்கின்றன

 

*துயரம் எனும் நெருப்பை அழிப்பதில் கண்ணீர்த்துளிகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை

 

*ஒளியால் எப்போதாவது இருளடைய முடியுமா?

 

*வேகத்திற்கும்,நினைவிற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இல்லாவிட்டால் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் வாகனங்களில் நாம் பயணிக்கும் போது ஏன் ஏகப்பட்ட நினைவுகள் நம் மனதில் வந்து குவிகின்றன?

 

             *குறிப்பு*

 

இந்தப்புத்தகம் flipkart மூலம் வாங்கினேன் பக்கங்கள் சுமாராக உள்ளது பக்கங்கள் மஞ்சள் அடித்து விட்டது 

  *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments