கரை ஒதுங்கிய காகிதங்கள் ஆசிரியர்கள் :அமுதா வனிதா

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:271

தேதி:02-05-2023

புத்தகம் எண்ணிக்கை:271   

நூலின் பெயர் : கரை ஒதுங்கிய காகிதங்கள் 

ஆசிரியர்கள் :அமுதா வனிதா 

பக்கங்கள் : 69 

விலை : 50 

பதிப்பகம் : அமுத வனிதா பதிப்பகம் 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*"கரை ஒதுங்கிய காகிதங்கள்"  என்ற இந்நூலின்  தலைப்பே இருவரிக் கவிதை 

 

*ஒரு நூலினை படிக்க முதலில் மனதைத் தூண்டுவது அந்நூலின் தலைப்புதான் அந்த வகையில் நூலின் தலைப்பே நூலை நோக்கி ஈர்க்கிறது சிறந்த தலைப்பை வைத்ததற்கு கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

*நூலின் அட்டைப்பட வடிவமைப்பு புதுக்கவிதை 

 

*தலைப்பே இல்லாமல் இருந்தாலும் கூட தலைப்பை உணர்த்திவிடும் அட்டைப்படம்.

 

* கடற்கரை அலை  தவழும் இடத்தில் கரையோரத்தில் ஒதுங்கிய காகிதங்களின் படம் மிக மிக அருமை 

 

*இந்த அட்டைப்படம் கூர்ந்து கவனித்தால்  மற்றொன்றும்  சொல்கிறது கரையோரத்தில் காலடிச்சுவடுகள் படங்கள், இந்தக் காலடிச்சுவடுகள் உணர்த்துவது கவிதை உலகில் மிகச்சிறந்த கவிஞர்களாக காலடித்தடம் பதிப்போம் நாங்கள் என்று இந்த நூலின் கவிஞர்கள் சொல்லாமல் கூறுவது போல் உள்ளது கண்டிப்பாக கவிதை உலகில் நீங்கள் புதுக் காலடித்தடம் பதிப்பீர்கள் வாழ்த்துக்கள் 

 

* ஒவ்வொரு கவிதைகளுக்கும் பொருத்தமான படத்தேர்வு அருமை பாராட்டுக்கள் 

 

*கவிதைகள் வார்த்தைகளோடு   காட்சியோடு உணர்த்தினால் கவிதைகள் மிக எளிதாக மனதிற்குள் மையம் இட்டு விடுகிறது 

 

*என்னுடன் பயணித்தவர்கள் தான் எத்தனை எத்தனையோ..?

எல்லோருக்கும் முகவரி சொல்கிறேன் என் முகவரி தெரியாமல் ...!

 

கவிஞரின் எதார்த்தமும் தெரிகிறது 

 

*"முதல் நாள் கவிதை" அனைவருக்கும் தங்களின் முதல் சம்பளம் வாங்கிய தருணம் நினைவுக்கு வருகிறது.இன்று எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் முதன் முதலில் வாங்கிய சம்பளம் தந்த உணர்வை மறக்க முடியாது என்பதை உணர்ப்பூர்வமாக உணர்த்துகிறது.மிக அழகான உணர்வுபூர்வமான வெளியீடு

 

 *இன்று 

கை நிறையச் சம்பளம் 

என்றாலும் 

களவெட்டி 

கஞ்சி குடித்து 

அந்தி சாய்கையில் 

பெற்ற 20 ரூபாயை 

மறக்கத்தான் மனம் வருமோ...?

 

* எத்தனை பிரிவுகள், தேடல்கள் வந்தாலும் இந்த ஒரு கவிதையை போதும் அக்கா தங்கை உள்ளூர உள்ள பாச உணர்வை உணர்த்த 

 

*திசை மறந்து திரிந்தாலும்

உன் திசை நோக்கியே 

எண்ணம் 

திரும்புவது ஏனடியோ...? 

 

*ஆண் பெண் நட்பை சொல்ல இந்த வரிகளை விட சிறந்த வரிகள் இல்லை 

மிக அருமை 

 

*நீரின்றி மலர்ந்தாலும் 

நினைவுகளுடன் வாசம் வீசி 

பாலை வனத்திலும் பசுமையாய் மலரும் நம் நட்பு 

 

*தோள் கொடுக்கும் தோழனுக்கு கவிதையில் அன்பை காட்டிய விதம் மிக அருமை 

 

*கனவுகள் சிலநேரங்களில்கண்ணீருக்கு மருந்து ,கனவுகள் சில நேரங்களின் இயல்பை மறந்து இன்பத்தை தருபவை 

என்பதை உணர்த்துகிறது இவரின் கனவு கவிதை 

 

*கற்பனைக்கு மட்டும்

 கண்ணெதிரில் வந்து 

காட்சியளிக்கும் 

கனவுகளை 

பக்கத்தில் நின்று 

பார்க்கிறது கண்ணீர் 

யாவும் விதிப்படியே என்று 

 

*எப்போதும் மனதிற்கு சுகமான உணர்வையும் பழைய நினைவுகளையும் தூண்டுபவை காதல் கவிதைகளே. நினைத்துக்கூட பார்க்க முடியாத கற்பனையையும் அதி அற்புத வார்த்தைகளையும் தருபவை காதல் கவிதைகளை அந்த வகையில் இவரின் காதல் கவிதைகள் அழகியலை உணர்த்தும் அழகிய கவிதைகள் 

 

*என் இதயத்தில் பெரும் பகுதி உனக்குத்தான் என்றேன் 

அவன் 

சொல்ல மறந்து விட்டேன் நான் 

என் இதயமே 

அவன்தான் என்று 

 

இப்படி காதல் கவிதைகளால் மட்டுமே வார்த்தைகளால் கரைந்து போக முடியும் 

 

*திருமணத்திற்கு பின்பு பெரும்பாலான பெண்களின் நிலை அழகாக உணர்த்தும் கவிதை அருமை 

 

*கொஞ்சம் 

அனுசரித்துக் கொள் 

என்று 

அனுப்பி வைத்த 

அவர்களிடம் 

எப்படிச் சொல்வேன் 

எல்லாவற்றையும் 

அனுசரித்துக் கொண்டுதான் வாழ்கிறேன் என்று 

 

*இளம் வயதில் அனுபவம் மிகுந்த பக்குவப்பட்ட நிலை கவிதைகளில் பல இடங்களில் தெரிகிறது . கவிஞருக்கு ஏது வயது..? என்ற எண்ணம் உண்மையாகிறது 

 

*கவிதைகளின் அமைப்பு, புதுப்புது வார்த்தைகள், மாறுபட்ட சிந்தனைகள் ,எதார்த்த சூழலை நோக்கிய பரந்துபட்ட பார்வை இவையே இக்கவிதை நூலின் வெற்றியாகும் 

 

*நீண்ட நாட்களுக்கு பிறகு  பெண் கவிஞர்களின் அழகிய அர்த்தமுள்ள கவிதைகளை படித்த மன நிறைவு வாழ்த்துக்கள்.

 

*ஒரு நல்ல கவிதையின் வெற்றி படிக்கும்போது அந்தக் கவிதையை நமது மனதிற்குள் உள்ள மனநிலைகளை கவிதை மன நிலைக்கு சூழலுக்கு கொண்டு செல்ல வேண்டும் 

 

*இந்நூலில் பல கவிதைகளை படித்தவுடன் நம் மனது பின்னோக்கி பயணப்படுகிறது இது கவிதைக்கும் கவிஞர்களுக்கும் கிடைத்த வெற்றி 

 

* அமுதா வனிதா என்ற இந்த இரட்டை கவிஞர்களை பார்த்தவுடன் கலம்பகம் பாடுவதில் வல்லவர்களான இரட்டைப் புலவர்கள் இளஞ்சூரியர் முது சூரியர் நினைவுக்கு வருகிறார்கள்

 

நிறையப்படியுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் இன்னும் பல படைப்புகளை வெளியிடுங்கள் வாழ்த்துக்கள்.

               

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments