*தினம் ஒரு புத்தகம்* - எழுத்து சி.சு. செல்லப்பா

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:246

தேதி:07-04-2023

புத்தகம் எண்ணிக்கை:246              

புத்தகத்தின் பெயர் : எழுத்து சி.சு. செல்லப்பா 

ஆசிரியர் ,:வல்லிக்கண்ணன் 

பக்கங்கள் : 335  

விலை : 60 

பதிப்பகம்: விஜயா பதிப்பகம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*செல்ல மறுத்து புதுத்தடம் போட்டுக்கொண்டு இலக்கியத்தின் எல்லைகளை சற்று விரிவடைய செய்ய முயன்றவர்களை தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் க. நா.சுவின் இந்த வாக்கியத்தைத் தான் எழுத்து தன் குறிக்கோளாக கொண்டு தொடங்கப்படுகிறது என்று சிசு செல்லப்பா குறிப்பிடுகிறார் 

 

*தமிழ் எழுத்து துறையில் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று சிறப்பு பெயர் பெற்றிருந்த படைப்பாளிகளில் சி.சு .செல்லப்பாவும் ஒருவராவார் 

 

*1930 களில் தமிழ் சிறுகதைக்கு இலக்கியத்தனம் சேர்க்கவும் தமிழ் சிறுகதையை உலக இலக்கியத்திற்கு உயர்த்தவும் லட்சிய வேகத்தோடு எழுத்துப்பணியில் ஈடுபட்டார்கள் இளைஞர்கள் சிலர் அவர்களுள் மணிக்கொடி என்ற பத்திரிகை களம் அமைத்து கொடுத்தது 

 

*சி.சு .செல்லப்பா என்ற உடன் நினைவுக்கு வருவது எழுத்து பத்திரிகை தான் 

 

*அவ்வளவுக்கு அவருடைய எழுத்து இதழ் தமிழ் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்டது ஆகும் 

 

*மதுரை மாவட்டத்தில் வத்தலகுண்டுவில் 1912 இல் பிறந்தவர் 

 

*சரசாவின் பொம்மை, மணல் வீடு ஆகிய இரண்டு சிறுகதை கவிதைகள் அவருடையவை வெளியாகி இருக்கின்றன 

 

*எழுத்து புதுக்கவிதை வளர்ச்சிக்காக இயக்கமாகவே நடநடத்தப்பட இதழ்

 

*தமிழ் எழுத்துலகில் “மணிக்கொடி எழுத்தாளர்கள்“ என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த படைப்பாளிகளில் சி.சு. செல்லப்பாவும் ஒருவர் என்று கூறித்தான், அவரைப்பற்றியும், அவரின் எழுத்து இதழ் பற்றியதான தகவல்களையும் ஆரம்பிக்கிறார் திரு வல்லிக்கண்ணன்

 

*புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, மௌனி, பி.எஸ்.ராமையா, பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ந.சிதம்பர சுப்ரமணியம், சி.சு.செ., க.நா.சு., எம்.வி.வி., இவர்கள் அவரவர் ஆற்றலையும், தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் சிறுகதைகளை எழுதக்கண்டுதானே பிற்காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். 

 

*தாய் வழி ஊரான வத்தலக்குண்டு பற்றி அறியச் செய்ய வேண்டும் என்று பி.ஆர். ராஜம் அய்யருக்கு (கமலாம்பாள் சரித்திரம்) நூற்றாண்டு விழா எடுக்கிறார். 

 

*ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்தபோது எழுத்தாளன் ஆக வேண்டும் என்கிற உந்துதலில் கதை எழுதி அந்த முதல் கதை சங்கு இதழில் வெளி வருகிறது. 

 

*என் வாழ்வில் சங்கு சுப்ரமணியன் அவர்களை என்னால் மறக்கவே முடியாது. என் கதையை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தி முதல் கடிதத்தை எழுதியவர் அவர்தான் என்று பெருமையோடு நினைவு கூறுகிறார் சி.சு.செ.

 

*வாடிவாசல் நெடுங்கதையை எழுதுவதற்காக மஞ்சிவிரட்டு நடக்கும் இடத்திற்குச் சென்று கையில் ஒரு காமிராவோடு அவரே பல கோணங்களில் அந்த ஜல்லிக்கட்டு நிகழ்வைப் படம் பிடித்து வந்ததும், வீட்டிலேயே ஒரு இருட்டறை அமைத்து, அந்த ஃபிலிம்களைக் கழுவி புகைப்படங்களை உயிர் பெறச் செய்ததும் அந்த சிறு நாவலை எழுதுவதில் அவர் எவ்வளவு ஆர்வமும், தன் முனைப்பும் காட்டியிருகி்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.

 

*இலக்கிய விமர்சனத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டு அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் லைப்ரரி என்று பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து விடா முயற்சியோடு படித்திருக்கிறார்

 

* சிறந்த புத்தகங்களை வெளியிட வேண்டும் என்கிற ஆர்வமும் அதிகரிக்க, வ.ரா., ந.பிச்சமூர்த்தி, சிட்டி ஆகியோரின் படைப்புக்களை எழுத்து பிரசுரமாகக் கொண்டு வருகிறார். 

 

*வல்லிக்கண்ணன் எழுதி, தீபத்தில் வெளிவந்த புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற கட்டுரை நூலை நான்தான் கொண்டு வருவேன் என்று ஆர்வத்தோடு சொல்லி வெளியிட்டிருக்கிறார். 

 

 *தேர்ந்து கொண்ட கொள்கைகளிலிருந்து வழுவாமல் கடைசிவரை நேர்மையாக வாழ்ந்து கழித்து விட்டேன். அந்த திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது. என்று பெருமையுறும் சி.சு.செ.1998 டிசம்பர் 18ல் அந்தத் திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் வீட்டில் காலமாகிறார்.

 

*இத்தொகுப்பில் காந்தியவாதி செல்லப்பா என்று ஏ.என்.எஸ். மணியன் என்பவர் எழுதிய கட்டுரை மிகவும் மன நெருக்கமானதாகவும், ஆழ்ந்த நட்பு கொண்டதாகவும், மிகுந்த நேசத்தோடு விளங்குவதாகவும் அமைந்துள்ளது. 

 

*சி.சு.செ., க.நா.சு. பற்றிய சில குறிப்புகள் என்ற தலைப்பில் திரு தி.க.சிவசங்கரன் அவர்கள் (தி.க.சி) எழுதிய அற்புதமான கட்டுரையும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கிறது. 

 

*ஒரு சிறந்த ஆவணமாய்ப் பாதுகாக்கப்பட வேண்டிய வல்லிக்கண்ணனின் இந்நூல் இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய  புதையல்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments