*தினம் ஒரு புத்தகம்* - கண்ணதாசன் கவிதைகளில் தத்துவம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:215

தேதி:07-03-2023

புத்தகம் எண்ணிக்கை:215

புத்தகத்தின் பெயர்: கண்ணதாசன் கவிதைகளில் தத்துவம் 

ஆசிரியர் பெயர் : பெ.இளவரசன் பக்கங்கள் : 96 

விலை : 24 

பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் 

 

*எழுத்து என் ஆசையின் உச்சம் ,அதுவே என் நோக்கம், எப்படி எழுதுகிறோம் என்று நான் எண்ணம் பார்த்ததில்லை இது இறைவன் கொடுத்த பிச்சை என்கிறார் கவியரசு கண்ணதாசன் 

 

*கண்ணதாசன் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர் 

 

*நெஞ்சில் பட்டதை நேரில் சொல்லக்கூடியவர் அதே நேரத்தில் பிறர் நெஞ்சம் நோகாத வாரும் உரையாடும் இயல்புடையவர் 

 

*வாய்மை வழி நின்று நாட்டு மக்களுக்கு நல்ல வழி காட்டுவது அரசியல்வாதிகளின் பணியாகும் 

 

*வாழ்க்கையை வசந்தமாக்க காதல் தேவை என்கிறார் 

பெண்களை விட்டென்ன பேரின்பம் வழிகாட்டும் 

கண்களை விட்டென்ன கடவுள் நெறி

 

* எது திருப்பினும் என்ன நடப்பினும் இளமை திரும்பிடுமோ ஒரு தேதி நடந்திட தேதி நடந்திட திரையும் விழுந்திடுமோ ..?என்று அவரே கேட்டுக்கொள்கிறார்

 

* நல்ல எதிர்கால நம்பிக்கையே அவருக்கு தெம்பும் திறனும் அளித்தன ஊக்கமும் உற்சாகமும் ஊட்டின எனவே தான் 

 என்னடா துன்பம் அதை

 எட்டி உதை வாழ்ந்து பார் 

எப்போதும் உன்னை நம்பி 

என்று ஆணையிடுகிறார் 

 

*வீடு வரை உறவு 

வீதி வரை மனைவி 

காடு வரை பிள்ளை 

கடைசி வரை யாரோ.?

 என்று பாடி நிலையாமை தத்துவத்தை மிக எளிய சொற்களில் அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளார் 

 

*இறைவன் எங்கும் உள்ளான் என்பதை           கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்குள் கன்று வைத்தான் ஒருவன் அந்த ஏழையின் பேர் இறைவன் 

என்று கூறுகிறார் 

 

*கண்ணதாசன் தத்துவக் கருத்துக்களை படிக்க படிக்க மனதிற்குள் ஒரு அமைதி ஏற்படுகிறது

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments