தினம் ஒரு புத்தகம்* - உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி?




 *தினம் ஒரு புத்தகம்*

நாள்:214
தேதி:06-03-2023
புத்தகம் எண்ணிக்கை:214
புத்தகத்தின் பெயர் : உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி? 
ஆசிரியர் : ஆதனூர் சோழன் 
விலை : 60 
பக்கங்கள் : 112 
பதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு 

*எதை செய்தால் வாழ்க்கை சிறக்கும் எதை எதை தவிர்த்தால் நிம்மதி கிடைக்கும் என்பதை எல்லாம் ஆய்வு செய்து உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் அவர்களுடைய வழிமுறைகள் எளிமையானவை கடைப்பிடிக்க எளிதானவை அத்தகைய எளிய வழிகள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன 

*படங்களுடன் கூடிய இந்தப்புத்தகம் நல்ல பயனளிக்கும் 

*பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை விட குழந்தைக்கு முதலிலும் முக்கியமான ஆசிரியர் பெற்றோர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் 

*குழந்தைக்கு நல்ல அப்பா என்பதற்கு பத்து வழிகள் 
  
1)உங்கள் குழந்தையின் உணர்வை மதியுங்கள் 
2)குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் 
3)குழந்தைகளின் பிரச்சனைகளை கேளுங்கள் 
4)அன்பு கலந்த ஒழுக்கம் அவசியம். 5)முன்மாதிரியாக இருங்கள் 
6)ஆசிரியராக இருங்கள் 
7)குடும்பத்துடன் சாப்பிடுங்கள் 8)குழந்தைகளுக்கு படித்துக் காட்டுங்கள் 
9)பிரியத்தோடு இருங்கள் 
10)அப்பாவுக்கு நிகர் அப்பா தான் 

*பயனுள்ள முறையில் விடுமுறையை பயன்படுத்த 10 வழிகள் 
1)உடற்பயிற்சி 
2)எடை தூக்குதல்
3) மனப் பயிற்சி 
4)ஆழ்ந்த தூக்கம் 
5)எளிய உணவு 
6)மாற்றம் 
7)அதிக குடிநீர் 
8)ஓய்வு
9) தயாராகுங்கள் 
10) நடைபயிற்சி

*குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சார்ந்து பல்வேறு தகவல்களை இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது

 *நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments