இந்திய விடுதலையை முன்னெடுத்த புரட்சிகள் ஆசிரியர் :பேராசிரியர் ந.சஞ்சீவி பக்கங்கள் :360

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:286

தேதி:16-05-2023

புத்தகம் எண்ணிக்கை:286     

புத்தகத்தின் பெயர் : இந்திய விடுதலையை முன்னெடுத்த புரட்சிகள்

 ஆசிரியர் :பேராசிரியர் ந.சஞ்சீவி பக்கங்கள் :360 

விலை: 160

பதிப்பகம் : பூவிழி பதிப்பகம் 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*18 ஆம் நூற்றாண்டின் பின் பாதையில் அயலாருக்கு தலை வணங்க மறுத்து நெஞ்சுரத்துடன் போரிட்டு மாண்ட தமிழக வீர மறவர்கள் 

நெற்கட்டான் சேவல் பூலித் தேவர் 

கம்மந்தான் கான் சாகிபு 

சிவகங்கை மருது சகோதரர்கள் ஆகியோர்கள் பற்றி இந்நூல் கூறுகிறது 

 

*பூலித்தேவர் நெற்கட்டான் செவலை தலையிடும் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர் 

 

*இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று 1755 ஆம் ஆண்டு வீர முழக்கமிட்டவர் 

 

*விடுதலைப் போரான சிப்பாய் கழகத்திற்கு 1857 முன்னோடியாக திகழ்ந்தவர்

 

*மருதநாயகம் பிள்ளை என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான்ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார்.            

 

*1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் சைவவெள்ளாளர் குடும்பத்தில் பிறந்தார். 

 

*ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர். 

 

*பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தினை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர்.

 

 *தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். 

 

*அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் மருதநாயகம் பிள்ளை.

 

*மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். 

 

*ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். 

 

*பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். 

 

*இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

 

*ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

 

 *மருது சகோதரர்கள் நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments