சூப்பர் 30 ஆசிரியர்: பிஜு மாத்யு

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:288
தேதி:18-05-2023
புத்தகம் எண்ணிக்கை:288    
புத்தகத்தின் பெயர் : சூப்பர் 30 
ஆனந்த் குமார்
ஆசிரியர்: பிஜு மாத்யு
தமிழில் : D.I.ரவீந்திரன்
பக்கங்கள் :143
விலை:100
பதிப்பகம் :  வல்லமை

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      



*பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆனந்த் குமார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாததால் படிக்க முடியாமல் போனது.

* குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட மாலை நேரங்களில் அப்பளங்கள் விற்ற ஆனந்த் குமார், தனது ஏமாற்றத்தை எதிர்கொண்ட விதம் தனித்தன்மை கொண்டது. 

*புதுமையான கற்பிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு 2002இல் ‘சூப்பர் 30’ என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். 

*சமுதாயத்தில் அடித்தட்டு நிலையைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐஐடி - ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதப் பயிற்சி அளித்தார். 

*ஏழை மாணவர்களின் திறமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார்.

* கல்வியின் மூலம் வறுமையிலிருந்து மேலே வர முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார்.

* சூப்பர் 30இன் வெற்றி விகிதம் பிரமிக்கத்தக்கது. 

*ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 பேரில் 27 - 28 பேர் தேறிவருகிறார்கள்.

      * சூப்பர் 30 பயிற்சி மையத்தை 2002-2003 ஆம் ஆண்டுகளில் தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக நடத்தி வரும் ஆனந்த் குமார் என்பவரின் வாழ்க்கைக் கதையே, வெற்றிக் கதையே ஏழு தலைப்புகளில்  இந்நூலாக விரிகிறது.

     * பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு ஏழை குமாஸ்தாவின் மகனாக 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆனந்த குமார். தந்தை ராஜேந்திர பிரசாத், தாய் ஜெயந்தி தேவி. இளமையிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்டு சிறப்புறச் செயல்பட்டவர்.

   *1991 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பு முடித்த பிறகு தனது கணித திறமையின் மீது அவ்வாறு நம்பிக்கை கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அருகே கணித பயிற்சி மையத்தை தொடங்குகிறார் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சொல்லித் தருகிறார்   

* தனக்கு மிகவும் பிடித்த கணித மேதை ராமானுஜம் எனவே விரைவில் “ராமானுஜம் கணித பயிற்சிப் பள்ளி” என்று பெயர் சூட்டுகிறார். 

* ஆனந்தகுமாருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைக்கிறது போதிய பொருளாதார வசதி இல்லாததால் அவரால் படிக்க முடியவில்லை அந்த நேரத்தில் அவரது தந்தையும் இறந்து விடுகிறார் எனவே குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது கணித பயிற்சி பள்ளியும் மூடி விடுகிறார் தன் குடும்பத்தோடு சேர்ந்து அப்பளம் வியாபாரம் செய்கிறார்

*அப்பளம் வியாபாரம் மூலம் போதிய அளவு வருவாய் கிடைக்கிறது மீண்டும் 1995இல் கணித பயிற்சி பள்ளியை தொடங்குகிறார் தனக்கு கிடைக்காத வாய்ப்பினை ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைந்த கட்டணத்தில் ஏழை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார் இடையே தன்னுடைய அப்பள தொழிலும் செய்கிறார்

*ஆனந்த் காலையில் அப்பளத்தோடு சைக்கிளில் செல்லும்போதுதான் அன்றைய வகுப்பறை உத்திகள் தீர்மானிக்கப்படும் மற்றும் வழியெங்கும் அவர் பார்க்கும்,எதிர்கொள்ளும் விஷயங்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பாடத்தோடு இணைப்பது எப்படி என்பதையும் முடிவு செய்து கொள்வார். 

* போட்டித் தேர்வுக்கான கணித பாடத்தை கணிதமாக அல்லாமல் அன்றாட நடைபெறும் வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒன்றிணைத்து கற்பிக்கிறார் மாணவர்களுக்கு மிக எளிதாக புரிகிறது

* டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கும் கணிதப் புதிர்களை உருவாக்கித் தரும் பணியைச் செய்கிறார். அது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தருகிறது. 

* 36 மாணவர்களில் ஆரம்பித்த பயிற்சி மையம் ஆயிரத்தை கடந்து செல்கிறது மற்ற பயிற்சி மையங்களுக்கு இவர் மீது பொறாமை ஏற்படுகிறது பல்வேறு வழிகளில் இடைஞ்சல் ஏற்படுத்துகிறார்கள்

* மற்ற பயிற்சி மையங்களை விட 10 இல் ஒரு பகுதி தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது மிக சிறப்பாக கற்றுக் கொடுக்கப்படுகிறது மாணவர்கள் பணம் உள்ளபோது கட்டணம் செலுத்தலாம் போன்றவற்றின் காரணமாக நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிறது நிறைய மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்

* பிற மையங்களின் பொறாமை மற்றும் நெருக்கடி காரணமாக தனது பயிற்சி மையத்தை ஊருக்கு வெளியே மாற்றுகிறார் அப்போதும் மாணவர் எண்ணிக்கை குறையவில்லை இரண்டாயிரத்தை தாண்டுகிறது

 *2002 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆனந்தின் பயிற்சிப் பள்ளிக்கு அபிஷேக்ராஜ் என்னும் ஏழை மாணவன் வருகிறான். பயிற்சி கட்டணம் ஆயிரம் தன்னால் கட்ட முடியாது சிறுக சிறுக சேர்த்து ஆண்டு இறுதியில் கட்டி விடுகிறேன் என்கிறான் அதைக் கேட்ட ஆனந்தகுமார் கண் கலங்குகிறார் தனது இளமை நிலையை எண்ணி பார்க்கிறார் 

* ஆனந்த் தன் குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்து ஒவ்வொரு ஆண்டும் 30 மாணவர்களை நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுத்து இலவசமாக இருப்பிடம் உணவு புத்தகம் அளித்து பயிற்சி அளிப்பது  30 ஏழை மாணவர்கள் ஆண்டுதோறும் பயனடைய வேண்டும் என்பது ஆனந்தி இலக்கு

*முதல் ஆண்டிலேயே சூப்பர் 30 மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெறுகின்றனர் ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

*2003-18
2004-22
2005-26
2007-28
2008-28
தற்போது 30க்கு 30ம் தேர்ச்சி பெறுகின்றனர்

* ஆனந்தின் புகழும் ஆனந்த் பயிற்சி மையத்தின் புகழும் நாடெங்கும் பரவுகிறது இதைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற பயிற்சி நிறுவனங்கள் ஆனந்தை கொலை செய்ய முயற்சி செய்கின்றன ஆனந்த் தப்பித்து விடுகிறார் இன்று வரை அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பீகார் அரசு வழங்குகிறது

*இந்நூல் ஏழே தலைப்புகளில் உள்ளது. இதில் ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும் சூப்பர் 30 திட்டத்தால் பயனடைந்து வென்ற மாணவர்களின் பேட்டிகள் உள்ளன. இது மிகச்சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

* ஆனந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வந்து மிகவும் புகழ் பெற்றது 

*இடைவிடாத முயற்சியும் சரியான பயிற்சியும் இருந்தால் இந்த வானமும் வசப்படும் என்பதற்கு ஆனந்தின்  இந்தப் புத்தகம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும் 

*ஆசிரியர்களும் ,பெற்றோர்களும், இளைஞர்களும் ,மாணவர்களும் படிக்க வேண்டிய தன்னம்பிக்கை தரும் மிகச் சிறந்த புத்தகம் இது ஆகும்

                        *குறிப்பு*
*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments