*தினம் ஒரு புத்தகம்* - புத்தர்1000

 



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:189

தேதி:31-01-2023

புத்தகம் எண்ணிக்கை:189

புத்தகத்தின் பெயர் : புத்தர்1000

ஆசிரியர் : மு அப்பாஸ் மந்திரி 

பதிப்பகம் : விஜயா பதிப்பகம் 

பக்கங்கள் : 224 

விலை :170

 

"புத்தர் மனித இனத்திற்கு கூறிய ஆயிரம் அறிவுரைகளை தேடி எடுத்து புத்தர் ஆயிரம் என்ற இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது 

 

*வாழ்வு என்பது கண நேரத்தில் முடிவதில்லை ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்வதாகும் 

 

*சந்தனம் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையே மணக்கும் ஆனால் ஒரு நல்ல மனிதனின் புகழ் நாலாவது திசைகளிலும் பரவி மனம் வீசும் 

 

*நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல உண்மை எப்போதும் அமைதியுடன் இருக்கும் 

 

*தவறு செய்பவர்களைத் தண்டிப்பதை விட திருத்துவது அவனுக்கும் சமூகத்துக்கும் நல்லது 

 

*எவன் குற்றம் அற்றவனோ அவனே உலகில் அழகன் 

 

*அன்புக்காக செய்யப்படும் அன்பு தான் உண்மையான அன்பு

 

* நம்மை பலவீனமாக கருதுவதை நாம் செய்யும் பாவங்களில் முதன்மையானது

 

* போராட்டங்களில் வெல்வதே மனித சக்தி 

 

*எதிரிகளை விட நம் நாக்கையே அதிகம் அடக்க வேண்டும் 

 

*பிறருக்காக வாழுங்கள் உங்கள் வாழ்வு வளம் ஆகிவிடும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments