*தினம் ஒரு புத்தகம்* - திருக்குறள் 100

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:232

தேதி:24-03-2023

புத்தகம் எண்ணிக்கை:232                

புத்தகத்தின் பெயர் : திருக்குறள் 100  

ஆசிரியர் பெயர் : நடிகர் சிவகுமார்                 

விலை :200 

பக்கங்கள் : 312 

பதிப்பகம் : அலையன்ஸ் 

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*திருக்குறள் காட்டிய நல்வழியில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகத்தான தலைவர்கள் சாதனைப்படைத்த கலைஞர்கள் சரித்திரம் படைத்த படைப்பாளர்கள் எழுத்து வாசனை இல்லாத போதிலும் எல்லோருக்கும் அன்பு செலுத்திய சராசரி மனிதர்கள் வணங்கத்தக்க பெண்மணிகள் என பல்வேறு பட்ட மக்களின் வாழ்க்கைச் சம்பவங்களுடன் இணைக்கப்பட்ட முதல் முயற்சி அபூர்வமான உரை 

 

*திருக்குறளில் உள்ள சிறந்த குறளை தேர்ந்தெடுத்து அக்குறளின் பொருளுக்கு ஏற்ற 100 நபர்களின் வாழ்க்கை நிகழ்ச்சியை விவரித்துள்ளார் 

 

*ஒரு நதி மலையில் உற்றெடுத்து சிறிய அளவில் தன் பயணத்தை தொடங்கி நாள் தொட்டு வழிநெடுக வந்து சேரும் நீரை சுமந்து பொங்கிப் புரண்டு பாய்ந்து கடலில் கலக்கும் இறுதி தருணம் வரை எந்த இடத்திலும் ஒரு நொடியிலும் தேங்கி நின்று விடுவதில்லை ஒரு நதியைப் போல மனிதர்களும் வாழப் பழக வேண்டும் 

 

*திருக்குறள் 100 எனும் நூலின் மூலம் 100 முகங்களை அவர் தம் வாழ்வில் நிகழ்ந்த நம் மனதை கவரும் நிகழ்வுகளைப் பற்றி விளக்குகிறார் 

 

*திருச்சி வக்கீலில் தொடங்கி துப்புரவு தொழிலாளியில் முடிக்கிறார் 

 

*புண்ணியவதி பேச்சியம்மாள் 25 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு தண்ணீர் தானம் செய்து வருபவர் 

 

*பதவிக்காலம் முடிந்ததும் குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து ஒரு பெட்டியில் உடைகளையும் இன்னொரு பெட்டியில் தன் சொந்த காசில் வாங்கிய புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவர் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் 

 

*ஆறாம் வகுப்பு வரை படித்த தன் மனைவியை பி. ஏ ,எம் .ஏ ,வரை படிக்க வைத்தவர் சக்தி மசாலா துரைசாமி 

 

*பலகோடி லாபத்தில் உள்ள நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அரசு பள்ளிகள் தத்தெடுப்பு போன்ற பணிகள் செய்து வரும் சக்தி மசாலா துரைசாமி குடும்பத்தினர்

 

* 470/600 மதிப்பெண்கள் பெற்று பரிசு வாங்கிய வேலூர் மாணவர் பரிசுத்தொகையில் தன் உடன்படிக்கும் நாலு பேருக்கு துணி வாங்கி கொடுப்பதாக கூறியது எல்லோரையும் வியக்க வைத்தது.

 

* இப்படி விந்தையான விசித்திரமான பல நல்ல  உள்ளங்களை அறிமுகப்படுத்துகிறார் படிக்கும் போது நமது மனது லேசாகி விடுகிறது கண்ணில் கண்ணீர்தான் வருகிறது

 

*திருக்குறள்-100 என்ற தனது நூலை இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் நடிகர் சிவகுமார் பாராட்டுக்கள்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் அக்கமாப்பேட்டை இயக்குநர் நாகராஜன் நினைவு நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments