விடியலைத்தேடும் பூபாளங்கள் ஆசிரியர்:சு.செந்தில்ராஜா

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:136

தேதி:9-12-2022

புத்தகம் எண்ணிக்கை:136

புத்தகத்தலைப்பு: விடியலைத்தேடும் பூபாளங்கள்

ஆசிரியர்:சு.செந்தில்ராஜா

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


** நான் கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இளையவர் செந்தில் ராஜா நல்ல நண்பர்

 

** படித்தது வரலாறு என்றாலும் தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.அவரது முதல் கவிதை நூல் இது

 

** சிலருக்கு ஊரில் உறவினர்கள் இருப்பார்கள் எனக்கு ஊரே உறவினர் என்ற நன்றியுரை மூலம் இவரின் பழகும் குணம் தெரிகிறது

 

** அனைவருடனும் மிகுந்த அன்புடன் பழகுபவர்.

 

** பெரும்பாலும் காதல் கவிதைகளே எழுதும் நிலையில் சமூகம் சார்ந்த ஆர்வம் இவரது கவிதைத்தலைப்புகளிலே தெரிகிறது

 

** முதியோர் இல்லம்,குழந்தை தொழிலாளி,டாஸ்மாக் ஒழிப்பு,விதவை,விலைமகள் ,பொங்கல் போன்றவற்றை படிக்கும் போது இவரின் சமூக ஆர்வம் தெரிகிறது

 

** மிக அழகான எளிதான வலிமையான கவிதை வரிகள் மனதை ஈர்க்கிறது

 

** மனிதநேயம் தவழும் சமூக அக்கறையுள்ள கவிதை வரிகள்

 

** முதியோர் இல்லம்**

விலங்குகளால்

ஒதுக்கிவைக்கப்பட்ட

மனிதர்களின்

மறுவாழ்வு மையம்...!

 

** விலை மலர்கள்**

எத்தனையோ

வாலிப வண்டுகளின்

முதல்பகல்கள்

எங்களோடு முடிந்தன..!

 

** குழந்தை தொழிலாளர்கள்**

காவிரியில் தண்ணீர் வற்றினாலும்

இவர்கள் கண்களில்

கண்ணீர் வற்றுவதில்லை..!

 

  *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments