வாடாமல்லி ஆசிரியர்: சு.சமுத்திரம்

 


தினம் ஒரு புத்தகம்*

நாள்:131

தேதி:4-12-2022

புத்தகம் எண்ணிக்கை:131

புத்தகத்தலைப்பு:வாடாமல்லி

ஆசிரியர்: சு.சமுத்திரம்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


**திருநங்கைகளைப் பற்றிய முதல் நாவல்.

 

**நம் தமிழ் இலக்கியத்துள்ளும் திருநங்கைகள் வாழ்க்கையைச் சிலர் குறுநாவலாகவும், கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர். சமுத்திரம் அவர்கள் புதினமாக எழுதியுள்ளார்.

 

**எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் இப்புதினம் அவர்கள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினாகும். இது நாவலில், சுயம்புவை வாடாமல்லியாகக் காட்டுகிறார்.

 

**சுயம்பு என்ற ஆண், தனது கல்லூரிப் பருவத்தில்  பெண்தன்மையை உணரும்போது பெண்களாலேயேஅவமானப்படுத்தப் படுவதுடன் ஆரம்பமாகிறது புதினம்

 

**கல்லூரி குடும்பம் சமூகம் என்று பல இன்னல்களுக்கு ஆளாகி ஒருசமயத்தில் எல்லாராலும் வெறுக்கப்படும் ஒரு ஜீவனாக வீட்டைவிட்டு வெளியேறி அவன் சந்திக்கும் திருநங்கைகள் மூலமாக அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள்மேல் சமூகம் திணிக்கும் கொடுமைகளையும் எதிர்கொள்வதுதான் கதைச்சுருக்கம்

 

**தமிழகத்தின் ஒரு கிராமம், ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் சேரிப்பகுதி, டெல்லி, சில காவல் நிலையங்கள், கூவாகம் என்ற பயணிக்கிறது கதைக்களம்.

 

**சமையற்காரர்களாவும் ஒப்பாரிக்கலைஞர்களாகவும் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கில் அதிர்ஷ்டக்காரர்களாக வீட்டு விசேசங்களில் சிறப்பிக்கப்படுவதும், நம்மூரில் பேய்ப்பிடித்திருப்பதாக அடிவாங்குவதுமாக பால்பிறழ்வுகளின் சமூகநிலையை அழகாக விவரிக்கிறது புத்தகம்

 

**சுயம்புவிற்குப் பேய்விரட்டும் பகுதியும், வீட்டைவிட்டு வெளியேறுவதற்குக் காரணமான நிகழ்ச்சியும், சென்னையின் சேரி அனுபவமும், கூவாக நிகழ்வுகளும் கதையின் பலம்

 

** திருநங்கைக‌ளுக்கான முன்னோடி படைப்பு என்று தனித்து நிற்கிறது வாடாமல்லி.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

 

Post a Comment

0 Comments