பில்கேட்ஸ் சாப்ட்வேர் சுல்தான் ஆசிரியர்: என். சொக்கநாதன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:147

தேதி:20-12-2022

புத்தகம் எண்ணிக்கை:147

புத்தகத்தின் தலைப்பு: பில்கேட்ஸ் சாப்ட்வேர் சுல்தான் 

ஆசிரியர்: என். சொக்கநாதன் 

விலை: 200 

பக்கங்கள்: 200 

பதிப்பகம்: கிழக்கு

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*சாப்ட்வேர் உலகை மைக்ரோசாப்ட் ஆளுகிறது, மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் ஆள்கிறார் என்ற தொடக்கமே நூலை படிக்கத்தூண்டுகிறது. 

 

*இன்றைய இளைஞர்களின் லட்சிய மனிதரான பில்கேட்ஸின் வெற்றிக்குப் பின்னால் உள்ள வித்தைகளை ஆராய்கிறது இந்த நூல். 

 

*இந்தப்புத்தகம் 28 தலைப்புகளைக் கொண்டது 

 

*இந்த நூலில்  எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு கேள்வியின் நாயகன் என்ற தலைப்பு ஆகும்.

 

*அக்டோபர் 28ஆம் தேதி 1955இல் சீயாட்டல் நகரில் பிறந்தார் 

 

*பில்கேட்ஸ் இன் செல்லப் பெயர் ட்ரே மற்றும் பில் 

 

*தொட்டிலை ஆட்டினால் மிகவும் பிடிக்கும் யாரும் ஆட்டவில்லை என்றாலும் அவரே திரும்பி திரும்பி படுத்து தொட்டிலை ஆட்டிக் கொள்வார் அவ்வளவு துணிச்சலான குழந்தை 

 

*அக்டோபர் கடைசியில் பிறந்தவன் என்பதால் பள்ளியில் அவர்தான் வகுப்பில் சிறியவன் இதனால் உளவியல் ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது 

 

*குழந்தை பருவத்திலே மிக அதிகமான கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பார் பில்கேட்ஸ் கேள்விகளை சமாளிக்க முடியாத பெரியவர்கள் உன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் புத்தகத்தில் உள்ளது புத்தகத்தைப்படி என்று கூறி இளம் வயதிலேயே புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை தூண்டி விட்டனர் 

 

*குழந்தைப்பருவத்திலே புத்தகம் படிக்கும் ஆர்வலராக இருந்த பில்கேட்ஸ் என்சைக்ளோபீடியாவை  வருட கணக்கில் படித்தார் 

 

*ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து புதிர் கணக்குகள் கூறி உற்சாகமாக கலந்துரையாடுவார்கள் அதன் காரணமாகவே இயல்பாகவே கணிதத்தில் ஆர்வம் ஏற்பட்டது 

 

*பில்கேட்ஸ் மிக முக்கியமான நண்பன் பாலன் 

 

*பள்ளியில் படிக்கும் போது பில்கேட்ஸ் லேக்சைடு ப்ரோக்ராமர் குரூப் என்ற குழு அமைத்து ப்ரோக்ராம் எழுதினார் 

 

*மைக்ரோசாப்ட் எனும் கனவு சாம்ராஜ்யத்தை உருவாக்க பில்கேட்ஸ் நடத்திய போராட்டங்களின் தொகுப்பே இந்தப்புத்தகம்.

 

*என்னை பாதித்தது*

 

* எந்த செயலில் இறங்கினாலும் அது முடிக்கும் வரை அயராத உழைப்பு 

 

*ஒவ்வொரு விஷயங்களையும் ஆழ்ந்து யோசித்தல் 

 

*கேள்விகள் கேட்கும் திறன் பதிலுக்காக பல புத்தகங்களை படித்தது 

 

*பலதுறை நூல்களைப் படித்தது 

 

*தன் மீது முழுமையான நம்பிக்கை 

 

*மாறுபட்ட சிந்தனை மற்றவர்களிடமிருந்து 

 

*திட்டம் செயல்கள் அனைத்திலும் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொள்வது

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments