ராஜ ராஜ சோழன். ஆசிரியர்:ச.ந.கண்ணன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:146

தேதி:19-12-2022

புத்தகம் எண்ணிக்கை:146

புத்தகத்தின் தலைப்பு: ராஜ ராஜ சோழன்.              

ஆசிரியர்:ச.ந.கண்ணன் 

பதிப்பகம்: கிழக்கு 

விலை:140        

பக்கங்கள்: 136.      

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.            

*ராஜராஜ சோழன் வரலாற்றை மிக எளிமையான முறையில் மனதைக்கவரும் வகையில் எழுதப்பட்டுள்ளது 

 

*வலுவான சோழப்பேரரசை வலுவாக கட்டமைத்தவர் ராஜா ராஜா சோழன்.

 

*சமயம், மக்கள் நலன் மீது மிகுந்த அக்கறை செலுத்தியவர் ராஜராஜன் படைகள் கேரள போரில் ஆரம்பித்து இலங்கை மாலத்தீவு வரை வெற்றிவாகை சூடியது

 

* ராஜ ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் வரி வசூல் சற்று அதிகமாகவே செய்யப்பட்டது 

 

*இந்த நூல் ராஜ ராஜ சோழன் பற்றி 10 தலைப்புகளை உள்ளடக்கியது 

 

*ராஜ ராஜ சோழன் மன்னராக வேண்டும் என மக்கள் விரும்பியதை திருவாலங்காடு பட்டயங்களும் உடையார்குடி கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன 

 

*கிபி 985 இல் ராஜராஜ சோழன் பதவி ஏற்றார் 

 

*தஞ்சை அரண்மனையில் திருமஞ்சன சாளை என்கிற அரங்கத்தில் ராஜராஜ சோழனுக்கு பட்டம் சூட்டு விழா நடந்தது 

 

*யானை படை, குதிரை படை ,காலாட்படை என்ற மூன்று படைகளையும் வலிமையாக வைத்திருந்தான் 

 

*சோழ அரசர்களுக்காக ராஜ விசுவாசிகள் நவகண்டம் என்ற பெயரில் தம்மைத் தாமே பலியிட்டு கொண்ட நிகழ்வு சோழ வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ளது 

 

*சோழர்கள் கொண்டாடிய விழா இந்திரனுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்திய விழா முதன்மையான விழாவாகும்

 

*தஞ்சை பெரிய கோயில் ஒரு முற்று பெறாத காவியமாகும் அதில் கிட்டத்தட்ட 52 இடங்களில் வேலைகள் முழுமை அடையவில்லை 

 

*சோழ வம்சத்தில் கம்பீர அடையாளமாக ராஜராஜ சோழனின் வரலாறு படிக்க படிக்க வியக்க வைத்தது 

 

*என்னை பாதித்தவை*

 

*மக்கள் மீது அதிக வரி விதிப்பு 

 

*பெண்களை சமமாக மதித்தது 

 

*ஒவ்வொரு நிகழ்வுகளையும் கல்வெட்டுகளில் பதித்தது 

 

*நீண்ட கால திட்டமிடல்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments