அன்னா கரீனினா ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்

 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:142

தேதி:15-12-2022

புத்தகம் எண்ணிக்கை:142

புத்தகத்தலைப்பு:அன்னா கரீனினா

ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய்

தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

**எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.

 

**"அன்னா கரீனினா இந்த பெயரை இனி உச்சரிக்கும்போதே மனதில் தோன்றும் கலவையான உணர்வை எப்படி வெளிப்படுத்துவது அன்னா கரீனாவில் கொஞ்சமாவது கரைந்தால் மட்டுமே உணர முடியும்.

 

**லியோ டால்ஸ்டாய் எழுதிய உலகின் சிறந்த நாவல். ஆம் உண்மையிலேயே மிக சிறந்த நாவல் தான் எல்லா காலத்திலும் நிலைத்திருக்கும் மனித உணர்வை, அன்பை, காதலை, அகச்சிக்கலை பேசுகிறது நாவல். இதை எழுதிய போது ஆசிரியர் ஏதோ ஒரு மோன நிலைக்குள் ஆழ்ந்து தன்னை எதற்குள்ளும் திணித்து கொள்ளாது கரைத்து கொண்டு நம்மையும் கரைய வைத்திருக்கிறார்.

 

**நாவலின் மையப்புள்ளி அதீத காதல் என்ற ஒற்றை புள்ளி தான். ஆனால் அந்த மையத்தை சுற்றி டால்ஸ்டாய் வரைந்திருக்கும் வட்டங்கள், அவற்றின் பரிணாமங்கள் வெறும் காதலா என்று பார்த்தால் ஆம் என்றும் சொல்ல தோன்றுகிறது. இல்லை என்றும். காதலுடன் நாட்டின் வரலாற்றையும், அதன் பொருளாதார சிக்கல்களையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் விரிவாக அலசுகிறார்.

 

** லெவின் பாத்திரம் மூலம் டால்ஸ்டாய் அரை நூற்றாண்டில்ரஷ்ய வரலாற்றில் நடந்த திருப்புமுனையின் இயற்கை தன்மையை பதிவு செய்திருக்கிறார்.

 

**ஒரு பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு நுணுக்ககமாக எப்படி ஒரு ஆணாக டால்ஸ்டாய்யால் சொல்ல முடிந்தது என்ற பிரமிப்பிலிருந்து இன்னும் விலக முடியவில்லை

 

**அன்னா கரீனா பாத்திரத்துக்குள் செல்லும் முன்பே  டாலி மூலம் பெண்ணின் உணர்வு தளத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார்.

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments