வரலாற்று சுவடுகள்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:141

தேதி:14-12-2022

புத்தகம் எண்ணிக்கை:141

புத்தகத்தலைப்பு: வரலாற்று சுவடுகள்

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


**வரலாற்றுச் சுவடுகள்'' புத்தகம், இந்திய விடுதலைப் போர், உலகப் போர், இந்திய அரசியல், தமிழக அரசியல், தமிழக நிகழ்வுகள் உள்பட 308 கட்டுரைகள், 800 மேற்பட்ட பக்கங்கள் கொண்டு விளங்குகிறது.

 

**அழகிய தாளில் அச்சிடப்பட்டுள்ளது. கவர்ச்சியான படங்களை  கொண்டுள்ளது. வரைந்த படங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த படங்கள் பாடங்களாக நாம் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

 

** `தினத்தந்தி'யின் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் ஒவ்வொருவரின் இல்லந்தோறும் இருக்க வேண்டியது ஆகும்.

 

** சோழ மன்னன் ராஜராஜன், தஞ்சை பெரிய கோவிலை கட்ட 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக  கூறப்படுகிறது. 17 ஆண்டா என்று வியந்தது உலகு. ஆனால் 24 வருடங்கள் முயன்று தென்குமரியில் வானுயர்ந்த திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நிறுவினார்.

 

**  சிலை அமைக்கப்பட்ட முழு வரலாற்றை `தினத்தந்தி' சிறப்பாக தொகுத்து தந்துள்ளது

 

**மகாத்மா காந்தியை 1948-ல் சுட்டுக்  கொன்றார்கள். அதைக் குறிப்பிட்டுள்ள வரலாற்று சுவடு, அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஐக்கிய நாடுகள் சபை நடந்து கொண்டிருந்தது. இந்த செய்தியைப் பார்த்தவுடன் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஐக்கிய நாடுகள் சபை ஒத்திவைக்கப்பட்டது என்பது முக்கியமல்ல. ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களாக இருந்த எல்லா நாடுகளிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

 

**நாம் அறிந்த அளவில், ஒரு தனி மனிதனுக்கு எந்த நாட்டிலும், எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்கு உலக நாடுகள் அனைத்தும் தேசியக்  கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டது அன்றும் காந்திக்குத்தான், அதற்கு பிறகு யாருக்கும் அப்படிப்பட்ட ஒரு பெருமையைச் செய்ததில்லை.

 

** வரலாற்றுச் சுவட்டில் இடம் பெற்றிருக்கும் ஒரு செய்தி என்னவென்றால், விண்வெளி பயணம் ஆகும். விண்வெளி வரலாற்றில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் மாபெரும்  போட்டி உண்டு. அதில் ரஷ்யா முந்தியது. 1957-ல் பூமியை வலம் வரும் ஸ்புட்னிக் என்ற விண்கலம் பூமியை வலம் வந்தது. 1961-ல் யூரி காகரின் என்ற ரஷ்ய இளைஞர் பூமியைச் சுற்றி வந்து பத்திரமாகப் பூமிக்கு திரும்பினார்.

 

**அதே 1961-ல் அமெரிக்கா ஷெப்பர்டு என்பவரை பூமியை வலம் வர அனுப்பி வைத்தது. அப் போது பதவியில் இருந்த கென்னடி சொன்னார், 1970-க்குள் ஒரு அமெரிக்கன் சந்திரனில் கால் வைப்பான் என்று சபதம் செய்தார். அது ஏதோ வீம்புக்கு சொன்னது போலப்பட்டது. ஏனென்றால், பூமியில் இருந்து 3-1/2 லட்சம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிறது சந்திரன். அதைச் சுற்றி வருவதற்கு ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும்.

 

**அந்த விண்கலத்தில் இருந்து ஒருவர் சந்திரனைச் சுற்றி வர வேண்டும். அந்த கலத்தில் இருந்து சந்திரனில் ஒருவர் இறங்க வேண்டும். இதை 1970-க்குள் அமெரிக்கா செய்து முடிக்கும் என்று கென்னடி கூறினார். அப் போது அது வீம்புபோல பட்டாலும் அதற்கு ஓராண்டுக்கு முன்பே 1969-ல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்வைத்தார்.

 

**1961-ல் கென்னடி இந்த வாக்குறுதியை  கொடுத்தார். அவர் இல்லாவிட்டாலும், அந்த நாடு அந்த வாக்குறுதியை நிறைவேற்றியது. அதாவது சொன்னதை செய்வோம், செய்வதை செல்வோம் என்ற ஒரு குறிக்கோள் இருக்கிறது. அதை கென்னடி இருந்து செய்யாவிட்டாலும் அந்த நாடு செய்தது.

 

** இப்படி பல வியப்பான தகவலகள் பல உள்ளடங்கியுள்ளது

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments