மன வாசம் ஆசிரியர்:கவியரசு கண்ணதாசன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:107

தேதி:10-11-2022

புத்தகம் எண்ணிக்கை:107

புத்தகத்தின் தலைப்பு:  மன வாசம்

ஆசிரியர்:கவியரசு கண்ணதாசன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது படைத்த இலக்கியங்களில் தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கு மேற்பட்ட திரைப்பாடல்கள், அற்புதமான தமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை அளப்பரியது

 

** கவிஞன் ஒரு காலக்கணிதம் என்பதை நிருபித்தவர்

 

**1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிறகு உள்ள  கண்ணதாசனின் சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.

 

**சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட பொருள் இழப்புகளையும், அதனால் தோன்றிய மன காயங்களையும் சுய விமர்சனம் செய்து கவிஞர் கவிஞர்  மனவாசம் என்னும் சுய சரிதை எழுதியுள்ளார்

 

****வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை. உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன்.

 மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா? ‘சுயசரிதம் எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை. கூடுமானவரை சொல்ல வேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன் என எழுதியுள்ளார்.

 

** மனவாசம் 1961-ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்கிறார்

 

**நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல். நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிட்டேன். 

 

**என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக்கொண்ட பிறகு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.

இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால்… எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்….? என சுய விளக்கம் தருகிறார்

 

** மனவாசம் சுயசரிதையினை தனது எழுத்து நடை மூலம் அழகுட்டுகிறார் கண்ணதாசன்

 

** கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு நமக்கொரு படிப்பினை ஆகும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments