மூன்றாம் நதி ஆசிரியர்:வா.மணிகண்டன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:102

தேதி:06-11-2022

புத்தகம் எண்ணிக்கை:102

 

 தலைப்புமூன்றாம் நதி

ஆசிரியர்:வா.மணிகண்டன்


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

 

** வா.மணிகண்டன் அவர்களை கவிஞராக கட்டுரையாளராக இரு நூல்களில் பார்த்து தற்போது நாவலாசிரியராக மூன்றாம் நதி நூலில் பார்க்க முடிகிறது

 

** சக மனிதர்களின் சந்திப்புகளை கட்டுரை எழுதிய வா.மணிகண்டன் கணினி நகரத்தில் சராசரியான ஏழைச்சேரி பெண்ணின் வாழ்க்கையினை கதைப்படுத்தியுள்ளார்

 

**பெங்களூரைக் கதைக் களமாகக் கொண்டு பவானி என்கிற பெண்ணின் வாழ்க்கை கதையாகச் சொல்லப் படுகிறது. பெங்களூரின் அசுர வளர்ச்சிகளும் மாற்றங்களும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பேசுகிறது கதை.

 

** கதை பவானியில் தொடங்கி நகரமயமாதலினால் ஏற்படும் பிரச்சனைகள் நோக்கி நகர்கிறது.

 

** தண்ணீர் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சனைகள்,கணினியுக பகல் நேர தூக்க வாழ்க்கை,கலாச்சார மாறுபாடு,புதுயுக பெண்களின் வாழ்க்கை  என நகர்கிறது

 

** வசதி வாய்ப்புகள் பெருகப்பெருக மனித நேயம் மறைந்து விடுகிறது என்பதை நாவல் உணர்த்துகிறது

 

** கதையின் நாயகியினை எதற்குமே கலங்காத பெண்ணாக படைத்துள்ளார். தந்தை எவ்வளவு குடித்தாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது அவனைத் தாயாக கவனித்துக்கொள்கிறாள்.

 

** ரமேஷ் என்ற கண்ணியமான தோள்கொடுக்கும் தோழன் பாத்திரம் வருண் என்ற எதிர்மறை பாத்திரம் 

 

** நாவல் குறைவான பகுதிகள் இருந்தாலும் படிக்க படிக்க ஒவ்வொரு பகுதிக்கு விறுவிறுப்பு

 

** வார்த்தை ஜலங்கள் வர்ணிப்புகள் இல்லாமல் எதார்த்தமாக நிகழ்வுகளை படிக்கும் போதே நம் கண்முன் நடப்பது போல் இருக்கிறது.

 

**அலகாபாத்தில் கங்கையையும் யமுனையும்தான் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. சரஸ்வதி நதி தெரிவதில்லை. கூடுதுறையில் காவிரியும் பவானியும்தான் நமக்குத் தெரிகின்றன. அமுத நதி தெரிவதில்லை

 

**சரஸ்வதி நதியும், அமுத நதியும், இந்த நாவலின் நாயகி பவானியும் ஒன்றுதான்- மூன்றாம் நதிகள். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உயர்ந்த கட்டிடங்களும், மென்பொருள்நிறுவனங்களும், கேளிக்கை விடுதிகளும், விலையுயர்ந்த கார்களும்தான் கண்களுக்குத் தெரிகின்றன

 

**அதே பெருநகரில்தான் சேரிகளில் குப்பை பொருக்குபவர்கள்,கட்டிட வேலை செய்பவர்கள்,கல் உடைப்பவர்கள்,பிச்சை எடுப்பவர்கள் ஆதரவற்றவர்கள் சாதாரணக் கண்களுக்குப் புலப்படுவதேயில்லை. நாவலின் நாயகி பவானியைப் போல

 

** பவானியைப்போல் பெங்களூரில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்

 

** சக மனிதர்களை நேசிக்கும் மனித நேயமுள்ளவர்களால் தான் அனைவர்களையும் நேசிக்க முடியும் அவர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையையும் பதிவுசெய்ய முடியும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments