கொடி மரத்தின் வேர்கள் ஆசிரியர்:கவியரசு வைரமுத்து

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:102

தேதி:05-11-2022

புத்தகம் எண்ணிக்கை:102

 

 தலைப்பு: கொடி மரத்தின் வேர்கள்

ஆசிரியர்:கவியரசு வைரமுத்து

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**முத்துச் சிப்பிக்குள் நட்சத்திரங்கள் மாதிரி கவிதையின் உள்ளடக்கத்தில் சில சோதனை முயற்சிகள்

 

** ஆரம்பமே அற்புதமாக இருக்கிறது.

வேள்விகளுக்கு பதில்கள்

 

** காலம் கவிஞனை உருவாக்குகிறது; ஒரு மகாகவிஞன் காலத்தை உருவாக்குகிறான்

 

** ஒரு குழந்தை தாய்ப்பால் குடித்து வளர்கிறது- இது மரபு

 

*ஒரு குழந்தை புட்டிப்பால் குடித்து வளர்கிறது- இது வழக்கம்

 

* அழுத சம்பந்தனுக்குப் பார்வதி வந்து பால் கொடுத்தாள் - இது மூட நம்பிக்கை

 

** உன் பெயரை

மறக்கடிப்பதில்

தூக்க மாத்திரை கூடத்

தோற்றுப் போனதே..! மறக்க முடியாத காதலின் நினைவுகள்

 

** கடிதத்தில் அழிவது

மெல்லினமும் வல்லினமும்தான்

கண்ணீரில் அழிவது 

தமிழினமே அல்லவா. ?

       என ஈழத்தமிழர் நிலைக்கு கண்ணீர் விடுகிறார்

 

** அடிமை ஈழத்தில்

தம்பதிகளாய் இருப்பதினும்

சுதந்திர ஈழத்தில்

கல்லறைகளாய் இருப்போம்...! 

அழகாய் தமிழர்கள் காதலை கவிதைப்படுத்தியுள்ளார்

 

**வானத்தின் ஆழ நீலத்தில் அமிழ்ந்து போகிறேன். மேகங்களோடு நீச்சலடிக்கிறேன். அலைகளோடு சேர்ந்து கும்மி கொட்டுகிறேன். செருப்பில்லாத பாதங்களோடு புல்வெளிக்குப் போய்வருகிறேன். பூக்களோடு சிநேகமாயிருக்கிறேன். இசையில் கரைகிற போது எனக்குச் சிறகு முறைப்பதாய் நினைக்கிறேன். நல்ல கவிதைகளில் வாக்கியங்களில் இடைவெளியில் காணாமல் போகிறேன். சில நேரங்களில் நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருப்பேன். முத்துச் சிற்பிக்குள் நட்சத்திரங்கள் மாதிரி கவிதையின் உள்ளடக்கத்தில் சில சோதனை முயற்சிகள். 

 

**மனதைக் கவர்ந்த கவிதைகள். 

 

*பிடிக்க நினைத்ததென்னவோ 

பிள்ளையார்தான்

அவசரத்தில்

தும்பிக்கை 

வாலாகிவிட்டது

நம்பிக்கை

பாழாகிவிட்டது....!

 

*அரசியல் அவசம்

 

யானைகள் தின்றபோது

சிதறிய கவளங்கள்

சிற்றெறும்புகளுக்கு ...!

 

*நண்பர்களிடம் வினா

 

உங்களில் சிலருக்கு 

நரைத்துவிட்டதே

வீடு பழுதானதென்று

வெள்ளை அடிக்கிறதோ 

முதுமை...?

 

*கல்லுடைக்கும் சிறுவர்களின் பொருட்டு இரங்கல்...!

 

*பிஞ்செல்லாம் காயாகிக்

கனியத்தான் காத்திருக்கு

பிஞ்சுகளே உங்களுக்குக்

கையல்லோ காய்த்திருக்கு..!

 

*பாரதி பற்றி

 

அவன் 

மேற்கோளுக்கா

எழுதினான்.

குறிக்கோளுக்கல்லவா

எழுதினான்...!

 

**மழைத்துளியை வெவ்வேறு கவிதைகளில் திரவ நட்சத்திரங்கள் என்றும் திரவ வைரங்கள் என்றும் குறிப்பிடுவது அழகு.

 

**ஒரு புல்லாங்குழலின் பூர்விகம் அற்புதமான கவிதை. 

 

புல்லாங்குழலே

புலம்பாதே

உன் தேகம்

சுடப்பட்டபின்னும்

சுரங்கொடுக்கிறாய்

சுடலை மனிதன் சுரந்தருவானா

 

புல்லாங்குழல்

தன் கண்களால்

ஆனந்த ராகத்தை

அழுதது ! 

 

** கவிப்பேரரசு வைரமுத்து வின் கவிதைகளைப் படிக்கும் போது புதுக்கவிதைகளையும் கவிதைகளையும் தேடித்தேடி படிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post