என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி ஆசிரியர்:வா.மணிகண்டன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:101

தேதி:04-11-2022

புத்தகம் எண்ணிக்கை:101

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

 தலைப்பு: என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி

ஆசிரியர்:வா.மணிகண்டன்

 

**வா.மணிகண்டன் எழுதிய 45 கவிதைகளின் தொகுப்பு

 

** ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது ஒரு வித்தியாசமான அணுகுமுறை

 

** முக நூலில் இவரது பதிவுகள் பார்த்தது உண்டு சமூக நலன் சார்ந்து உள்ளது பள்ளிப்பணிகளுக்கு இவரின் பங்களிப்பை பார்க்கும்போது இவர்மீது தனிப்பட்ட மரியாதை

உள்ளது.

 

** என்னைக் கவர்ந்தவர்களில் வா.மணிகண்டனும் ஒருவர்

 

** இந்தக்கவிதை தொகுப்பினை நம்பிக்கையுடனோ அல்லது அவ நம்பிக்கையுடனோ கையில் எடுத்திருக்கும் உங்களுக்கு நன்றியும் பிரியமும் என்ற ஆரம்ப வரிகளே மேலும் படிக்கத்தூண்டுகிறது.

 

** இவரது கவிதைத்தொகுப்பும் ஆழ்ந்து படிக்கும்போது நுட்பமான பொருள் கிடைக்கிறது

 

** புதுக்கவிதைகளிலும்,கவிதைகளிலும் இவரது படைப்புகள் சற்று வித்தியாசமாக புதிய பாணியில் இருக்கிறது

 

** நான் வியந்த்த என்னை ஈர்த்த கவிதைகள் பல அவற்றில் சில

 

** மரண வீட்டில் குழந்தைகளின் உலகத்தை அழகாக படம் பிடித்துக்காட்டுகிறார் காட்சிகளை கவிதைகளில் நுட்பமாக கவிதையாக்கி உள்ளார்

 

* இன்று மதியம்

 தூக்குப்போட்டு இறந்தவனின் வீட்டில்

குழந்தைகள் 

ரயில் விளையாட்டை

விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்

 

**எனக்கு மிகவும் பிடித்த  கவிதை சாயல்கள்  பற்றியது .மறக்கத்தான் நினைக்கிறேன் மறக்கமுடியாத நினைவுகளை

 

*“மறக்கப்பட வேண்டியவர்கள் 

ஏதாவதொரு சாயலில் 

ஏதாவதொரு சாலையில்

எதிர்பாராத பொழுதில் 

நம்மைக் கடக்கிறார்கள்...!"

 

** வகுப்பறைக்கு வித்தியாசமான பெயர்

 

* குட்டிச்சூரியன்கள் உள்ளிறங்கும்

வகுப்பறைகள்

 

** நாம் பேசும் வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் கவிதை

 

* எப்பொழுதும்

ஒரு சொல்

அல்லது

ஒரு வாக்கியம்தான்

உறவின் விரிசலுக்குக் காரணமாகிறது

 

** விசித்திரமான காதல்

 

*பேருந்து நிறுத்தத்திற்கும்

மதுக்கடைக்கும்

இடையில் ஓடிய

மூத்திர நதியில்

மிதந்துகொண்டிருந்தது

அன்றைய நிலவு

 

**முரண் ததும்பும் கவிதை

 

* இப்பொழுது

ஏற்றுக்கிறார்கள்

அஹிம்சையின் கொடிக்கம்பத்தில்

ரத்தம் நனைந்த வெள்ளைத் துணியொன்றை

 

** ஹைக்கூ வில் அற்புதமான கவிதை

 

*ஹெல்மெட்

கண்ணாடி வழியே

பார்த்துக்கொண்டிருக்கிறான்

நசுங்கிய கால்

 

* மூடாத விழிகளில்

வானம் நோக்குகிறது

அநாதைப்பிணம்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments