மாதொருபாகன் ஆசிரியர்: பெருமாள் முருகன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:124

தேதி:27-11-2022

புத்தகம் எண்ணிக்கை:124

புத்தகம்: மாதொருபாகன்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


** கதை 34 பிரிவுகளாக உள்ளது

 

**நாவலை படிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க மனக்கண்முன்னே காட்சிகள் ஆரம்பமாகிறது

 

** நாவலின் கதாபாத்திரங்கள் நம்மோடு பேச ஆரம்பித்து நம்மை ஆக்ரமித்துவிடுகிறது

 

** குழந்தையில்லா தம்பதிகள் அடையும் மன வேதனைகளை உளவியல் ரீதியாக கதைப்படுத்தியுள்ளார்

 

** சமுதாயத்தின் கிண்டல்கள் உறவுகளின் உரசல்கள் போன்றவற்றை அதிர்வுகளாய் பதிவு செய்திருக்கிறார்

 

** காளி கதாபாத்திரம் கதைநாயகன் அவன் தனக்கென தொண்டுபட்டி என்னும் ஒரு உலகத்தை உருவாக்கி அதில் வாழ்கிறான்

 

** கதையின் நாயகி பொன்னா படிக்கும் போதே கண்ணீர் வருகிறது குழந்தை இல்லாத காரணத்தால் அவள் அடையும் அவமானம்,ஏளனங்கள் நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

 

** முத்து ,காளி நட்பு பார்க்கையில்

நட்பு

நடிப்பில்லை

மனித உயிரின்

உயிர்துடிப்பு என்பது புலனாகிறது.

 

** கதையின் களங்களையும் சூழ்நிலைகளையும் ஆசிரியர் வர்ணிப்பதும் விளக்குவதும் கதைக்களத்திற்கே நம்மைக்கூட்டி சென்றுவிடுகிறது

 

** கதையின் சில இடங்கள் பார்த்தது போலே இருக்குறது.கிட்டத்தட்ட திருச்செங்கோடு மலை போலவே புலப்படுகிறது.

 

** மையமாய் உணர்வது ஆண்கள் தவறு செய்யலாம் திருமணத்திற்கு பிறகு திருந்திவிடலாம்.பெண்கள் தவறு எப்போதும் செய்யக்கூடாது.என்ற பெண்ணடிமை நிலை அக்காலத்தில் இருந்ததை கதைப்படுத்தியுள்ளார்.

 

** தாயின் பேச்சுக்கு மரியாதை தரும் மகன் ,மகனுக்காக வாழும் தாய் மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

** நாம் செய்யும் பாவம் தலைமுறைகளை பாதிக்கும் என்றக்கருத்தை படிக்கும்போது "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" நினைவுக்கு வருகிறது.

 

**இரண்டாம் திருமணம் என்றதும் காளியின் மனம் யோசிக்கும் கருத்துக்கள் அனைத்தும் உளவியல் ரீதியான அணுகுமுறை

 

** சித்தப்பா கதாபாத்திரம் கதைக்கு இடைஇடையே நகைச்சுவை

 

**கணவனை சுவாசமாக சுவாசிக்கும் பொன்னா பெண்மையின் மணிமகுடம்

 

** திருமணத்திற்கு பிறகு மனைவியைத் தவிர வேறுபெண்களை திருமணம் செய்ய மறுக்கும் காளிஆண்மையின் அடையாளம்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments