கொலைதூரப்பயணம் ஆசிரியர்:எண்டமூரி வீரேந்திரநாத்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:121

தேதி:24-11-2022

புத்தகம் எண்ணிக்கை:121

புத்தகத்தலைப்பு: கொலைதூரப்பயணம்

ஆசிரியர்:எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில் : கௌரி கிருபானந்தன்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


** இந்த நாவல் வீரேந்திரநாத் எழுதிய நான் படிக்கும் அவரின் மூன்றாவது நாவல் 

 

** தெலுங்கில் இருந்து நாவலை அழகாக மொழி பெயர்த்துள்ளார் கௌரி கிருபானந்தன்

வர்ணிப்பு,வார்த்தைகள் கையாடல் நடை போன்றவை மிக அருமை

 

** நாட்டில் செயல்படும் சமூக விரோதிகளின் 

சதி செயல்பாடுகளை மையப்படுத்தி விளக்கியுள்ளார்

 

** திரைப்படம் போல் விறுவிறுப்பாக உள்ளது

 

** நாவல் ஆசிரியர் பெண்களை மதித்து போற்றும் உணர்வு அவரின் கதாபாத்திரங்கள் படைப்பு மூலம் தெரிகிறது

 

** காவல்துறை மற்றும் அரசுத்துறையில் உள்ள நல்லவர்களை அழகாக வெளிப்படுத்துகிறார்

 

** பங்குசந்தைகளின் அவரின் நுட்பம் கதை நிகழ்வின் வெளிப்பாடு மூலம் தெரிகிறது

 

** சங்கிலி போல் ஆட்களை சேர்த்தால் பணம் கிடைக்கும் உங்களுக்கு கீழ் சேரச்சேர உங்களுக்கு பணம் கிடைக்கும் என்ற ஏமாற்று வேலைகளை அழகாக விளக்குகிறார்

 

** அனுஷா கதாபாத்திரம் புதுமைப்பெண் நுட்பமான அறிவு,தெளிந்த பார்வை ,சமயோசித புத்தி ஆகியவை ஒருங்கே கொண்ட படைப்பு

 

** சமூக விரோதிகளின் ஒட்டுமொத்த அடையாளமாக வசந்த்தாதா,சங்கர் பாத்திரங்கள்

 

** இந்திய உளவுத்துறை RAW அதிகாரி போல் ஆரம்பத்தில் ஓட்டல்காரன் போல் சாதாரண மனிதனாக காட்டிவிட்டு இறுதியில் போலிஸ் அதிகாரியாக ஜானி

 

** கிளைப்பாத்திரங்கள் பல்வன்,ஹீரிகாந்த்,பாண்டா,வத்சலா,சர்மா,

சுக்ரீவ்,யமின்சுன் அனைத்தும் கதைக்கேற்ப படைத்துள்ளார்

 

** காவல்துறையிலும் சில அரசுத்துறையிலும் லஞ்சம் வாங்குபவர்களால் தான் சமூக விரோதிகள் வளர்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்

 

** நாட்டைச்சீரழிக்கும் சமூக விரோதிகளை களைஎடுப்பதே நாவலின் மையக்கருத்து

 

** நாவலை படிக்கும் போது பல தமிழ்ப்படங்கள் நினைவுக்கு வருகிறது

 

** அனுஷா கதாபாத்திரம் நடிகை விஜய சாந்தியை நினைவுபடுத்துகிறது.

 

** வசந்த் தாதா நடிகர் ரகுவரனை நினைவு படுத்துகிறது

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments