சார்லின் சாப்ளின் ஆசிரியர்: யூமா வாசுகி




*100- வது நாள்,100- வது புத்தகம்**   

    

அனைவருக்கும் வணக்கம் கடந்த நூறு நாட்களாக புத்தக விமரிசனப்பதிவை படித்து பாராட்டி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

 

*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:100

தேதி:03-11-2022

புத்தகம் எண்ணிக்கை:100 

புத்தகத்தலைப்பு: சார்லின் சாப்ளின்

ஆசிரியர்: யூமா வாசுகி

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**ஏப்ரல் 16,  1889ம் ஆண்டு ‘சார்லஸ் சாப்ளின் - ஹன்னா சாப்ளின்’ தம்பதிக்குமகனாக 

பிறந்தார்.

 

**சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மன நலம் பாதிக்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார்.

 

**மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும், பெரிய தொப்பியும், சிறு மீசையுடன் நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. 

 

**சார்லின் சாப்ளின் சிறப்பான நடிப்புக்காக எலிசபெத் ராணியார் அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார். 

 

**சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார்.

 

**சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும் வியப்புற்றனர்.

 

**சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப்பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது

 

**சார்லின் சாப்ளின் கடைசி திரைப்படங்கள் -"தி கிங் இன் நியூ யார்க்" (1957) , "தி சாப்லின் ரெவ்வூ" (1959) மற்றும் சோ·பியா லாரென்.

 

**யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தாராம்

 

**சார்லின் சாப்ளின் அமுத மொழிகள்**

 

**ஒரு மனிதனின் உண்மையான சொரூபம் ; அவன் குடித்திருக்கும் போது தெரியவரும்.

 

**நாம் ரொம்ப அதிகமா யோசிக்கறோம்; ரொம்ப குறைவா உணர்கிறோம்.

 

**இவ்வுலகத்தில் ஒவ்வொருதருக்கும் இடமிருக்கு ; எல்லோருக்கும் கொடையளிக்கும் அளவுக்கு வளமையானது இவ்வுலகம். வாழ்க்கைக்கான பாதையும் அழகா இருக்கு; ஆனால் வழியைத்தான் தொலைத்துவிட்டோம்.

 

**பேராசை மனிதன் மனத்தை விஷமாக்குகிறது; தன்னைச்சுற்றி வெறுப்பெனும் வேலியமைத்துக் கொள்கிறான். முட்டாள்தனமான நடவடிக்கையால் துக்கங்களை தேக்கி வைக்கிறான். வேகம் வளர்த்துகொண்டு அதில் நம்மை அடக்கிவிட்டோம்.

 

**இயந்திரங்கள் அளவுக்கதிகமான நம் தேவையை பூர்த்திசெய்கிறது.  அறிவு நம்மை சிடுமூஞ்சியாக்கிவிட்டது. நம் புத்திசாலித்தனம் மென்மை இழந்து பண்பற்றதாகிப்போனது.

 

**எந்திரங்களை காட்டிலும் நமக்கு மனிச தன்மையும்; புத்திசாலிதனத்தை காட்டிலும் நமக்கு நல்ல பண்பும், இனிய குண நலன்களும் தேவை. இவைகள் இல்லை என்றால் வாழ்க்கை போராட்டமாகவும்; எதுவும் இல்லாமலும் போகும்.

 

**மதிப்புடைய வாழ்கையை தேடி கண்டுபிடிக்கலாம்... உன் புன்சிரிப்பால்.

 

** ஒழுங்கீனமான உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை;

 

** நம்முடைய தொல்லைகளும் தான். 

வாழ்க்கை அழகானதும் அற்புதமானதும் கூட ஜெல்லி மீன் போல..

 

**நீ எப்போதும் வானவில்லை காண முடியாது உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்.

 

**எப்போதும் மழையில் நனைந்த படியே நடக்கப் பிடிக்கிறது. என் கண்களில் கண்ணீரை யாரும் பார்த்துவிட முடியாதே.

 

**1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில் காலமானார் 

 

** சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே செய்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது

 

**உலகில், கடைசி மனிதனின் முகத்தில் சிரிப்பு இருக்கும் வரை, அதில் சாப்ளின் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். 

 

*தனது வேதனைமற்றும் வலிகளைப் புன்னகையாக மாற்றி,சந்தோஷத்தை மட்டுமே நமக்கு கொடுத்த ஒரே கலைஞன் சார்லி சாப்ளின் மட்டுமே*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments