அரசியல் எனக்குப் பிடிக்கும் ஆசிரியர்:ச.தமிழ்ச்செல்வன்


 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:116

தேதி:19-11-2022

புத்தகம் எண்ணிக்கை:116

புத்தகத்தலைப்பு: அரசியல் எனக்குப் பிடிக்கும்

ஆசிரியர்:.தமிழ்ச்செல்வன்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


** பத்து தலைப்புகளில் அரசியலை அலசி ஆராய்ந்து நம்மை வியக்க வைக்கிறார்

 

**அரசியல் என்றால் என்ன?அதை ஏன் பலரும் சாக்கடை என்று சொல்கிறார்கள்?அரசியலின் வரலாறு என்ன?அரசு என்பதன் பொருள் என்ன?இப்படியான எளிய கேள்விகளோடு துவங்கு கிறது இந்தப்புத்தகம் 

 

**அரசு என்னும் அடக்குமுறைக்கருவி மனித குல வரலாற்றில் தோன்றிய கதையிலிருந்து இடதுசாரி என்றால் என்ன?வலது சாரி என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு விவாத பாணியில் விளக்கம் சொல்கிறது.

 

**விதவிதமான ஆட்சி முறைகள் பற்றிப் பேசி ஜனநாயகம் என்பதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ அரசியலை சமகால கட்சி அரசியலோடு இணைத்து விளக்குகிறது.

 

**அரசியல் பற்றி சமீபத்தில் வந்துள்ள இந்த எளிய புத்தகத்தில் கலாச்சார அரசியல் பற்றியும் முதலாளித்துவத்தை ஆவேசமாக எதிர்க்கும் பாட்டாளி வர்க்கம் கருத்து ரீதியாக அதே முதலாளித்துவத்தின் கலாச்சார நிறுவனங்களிடமே மாட்டிக்கொண்டிருக்கும் யதார்த்தம் பற்றியும் அதற்கெதிராக பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சார அரசியல் பற்றியும் பேசுகிறது.

 

**அரசியல், சமூகம், பொருளாதாரம் எனும் மூன்று கூறுகள் உலக வாழ்க்கையில் எல்லா         மக்களுக்குமான முக்கிய அம்சமாகும். விரும்பினாலும் விரும்பாவிட்டாமும் இவற்றில் இருந்து எந்த ஒரு மனிதனும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது

 

**இன்றைய நிலையில் அரசியல் ஒரு தீண்ட தகாத பொருளாகவே பார்க்கப்படுகிறது. பொது வெளியில் அரசியலின் இருண்ட பக்கம் மக்களிடையே ஒரு கசப்புத் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. உலகாளாவிய அரசியல் ஆனாலும் அல்லது உள்ளூர் அரசியல் ஆனாலும் அங்கிருக்கும் அரசியல் தன்மை என்பது ஏற்றமும் தாழ்வும் சேர்த்தே விமர்சிக்கப்படுவதை நாம் காணலாம்

 

 **தமிழ்ச்செல்வன். அரசு, அரசியல், அரசாங்கம் என்பதன் விளகங்கள் இந்நூலினை வாசிக்க ஆர்வம் கெள்ள செய்கிறது

 

**அரசியல் என சொல்லும் போது உங்கள் கண் முன் தோன்றும் காட்சி என்னவாக இருக்கும்? அரசியல் தலைவரின் முகமோ, அரசின் அலுவலகமோ உங்கள் மனக் கண்ணில் காட்சியளிக்கலாம். அரசியல் கட்சிகள் இல்லாத போதும் அரசாங்கம் நம்மை ஆட்சி செய்தே வருகிறது

 

**இராணுவம், காவல்துறை மேலும் இதர அரசு நிர்வாகங்களும் நாட்டின் சட்ட திட்டங்களை பாதுகாக்க வழிவகுக்கிறது. நீதி, நிர்வாகம், இராணுவம், போலீஸ் இதையெல்லாம் நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதில்லை. இருந்தும் நமது விருப்பம், தேர்வுகளுக்கு அப்பால் இரும்புப் பிடியாக நம்மீது இடையறாது ஆட்சி செலுத்திக்கொண்டே இருக்கிறது அரசு என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

**இதுவே கம்யூனிச முறையில் நமது பார்வை இரண்டே சொல்லுக்குள் அடங்கிவிடுகிறது. ஒன்று இடது சாரி அரசியல் மற்றொன்று வலது சாரி அரசியல்

 

**ஆட்சி, அரசு, அரசாங்கம் என்பதை பொய்யாக்கும் ஒரு கோணத்தை கம்யூனிச மேதை கார்ல்மாக்ஸ் குறிப்பிடுகிறார். நாட்டின் சொத்துடைமை அல்லது பொருளாதாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதை அரசியல் நிர்ணயம் செய்கிறது.

 

**அரசியல் என்பதன் கோ ணங்களையும் ஒரு விரிவான பார்வையையும் நமது புரிதலையும் சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நூல் நிச்சயமாக நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments