பதார்த்த குண சிந்தாமணி ஆசிரியர்:முனிச்சிரேஷ்டர்கள்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:111

தேதி:14-11-2022

புத்தகம் எண்ணிக்கை:111

தலைப்பு: பதார்த்த குண சிந்தாமணி

ஆசிரியர்:முனிச்சிரேஷ்டர்கள்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


**பதார்த்தகுணசிந்தாமணி தேரையர் என்னும் முனிச்சிரேஷ்டர்கள்சித்தரால் இயற்றப்பட்ட ஒரு மருத்துவநூலாகும்.

 

 **தமிழ் மருத்துவ  நூலான பதார்த்த குண சிந்தாமணியில் ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது

 

**‘பதார்த்தம்என்பது தாவரங்களின்  உறுப்புகளான வேர்,பட்டை, பிசின்,சாறுஇலை, பூ, காய்விதைஆகிய எட்டுப் பொருள்களையும் குறிப்பதாகும்.

 

**இப்பொருள்கள் கசப்பு, உவர்ப்பு, இனிப்புகார்ப்பு, புளிப்பு, துவர்ப்புஆகிய அறுவகைச் சுவைகளைக் குணமாகக் கொண்டிருக்கும். இவ்வகைப் பதார்த்தங்களைச் சிந்தாமணியாய்த் தொகுத்து உரைப்பதே பதார்த்த குண சிந்தாமணியாகும்

 

**அற்புத சிந்தாமணி யென்னும் பதார்த்தகுண சிந்தாமணி மூலமும் உரையும் - ஆசிரியர் திருநெல்வேலி காசீம் முகையதீன் ராவுத்தர். இந்நூல் இருபதாம் நூற்றாண்டில் இருமுறை பதிக்கப்பட்டது

 

**பஞ்ச மூலம் என்பது ஐந்து வெவ்வேறு மூலிகை வேர்களின் சேர்க்கை. அவை பின்வருமாறு....

1. திப்பிலி வேர்

2. பேரத்தை வேர்

3. கொடிவேலி வேர்

4. சுக்கு வேர்

5. கண்டு பரங்கி வேர் 

இந்த பஞ்ச மூல வேர்களைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகளினால்  வாதம், மகாவாதம், பக்கவாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், எரிவாதம், குதிவாதம், குடல்வாதம், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல், பித்தம், பித்தசுரம், குடல்பிரட்டல், வாந்தி, மனக்கலக்கம், குழப்பம், கபம், இருமல், சலதோசம், மூக்கடைப்பு, காசம், சுவாசகாசம், இரத்தகாசம், கபாலநீர், நீர்க்கோர்வை ஆகிய நோய்களை தீர்க்க முடியுமாம்.

 

**பதார்த்த குண சிந்தாமணி எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில  பழக்கங்கள் 

 

**சில நலவாழ்வுப் பழக்கங்கள்:

 

* நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.

* வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.

* மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு.

* 45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் ( nasal drops ) மருந்து விடுவது.

* நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.

* வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.

 

**செய்யக் கூடாத விஷயங்கள் 

 

* முதல் நாள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது.

* கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.

* பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.

* நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.

* பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.

* உணவு உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments