சிற்பியே உன்னை செதுக்குகிறேன் ஆசிரியர்:கவியரசு வைரமுத்து

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:110

தேதி:13-11-2022

புத்தகம் எண்ணிக்கை:110

புத்தகம்: சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

ஆசிரியர்:கவியரசு வைரமுத்து

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


**கவியரசு வைரமுத்துவின் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரும் 24 கட்டுரைகளின் தொகுப்பு சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

 

**முன்னுரையே வியக்க வைக்கிறது " இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு பிறந்தவனால் இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிறகு பிறந்தவர்களுக்காக எழுதப்பட்ட நூலிது."

 

**கவியரசுவின் கட்டுரைகளும் கவிநடையில் நம்மை வார்த்தைகள் வசப்படுத்துகிறது

 

** படிக்கும் போதே நம்மை ஈர்க்கிறது

 

** உன் நன்மை கருதும் நண்பனாய்...

உன்னைத் தொட்டுப் பேச உரிமை கொண்ட தோழனாய் என தோழமையோடு அறிவுரைகள் கூறுகிறார்.

 

** நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் உண்மையானது

அந்த நிமிடங்களக இலட்சியங்களால் மட்டுமே கௌரவிக்கப்படுகின்றன எனக் கூறி இலட்சியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்

 

** ஒராண்டு காலமாய்த் திணித்த திணிப்பை மூன்று மணி நேரத்தில் அவசரமாய் வாந்தியெடுக்கச் சொல்வது அநியாயம்

இந்தக் கல்விமுறை நல்ல குடிமகன்களை அல்ல கையொப்பமிடத் தெரிந்த மரங்களைத்தான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. எனக்கூறி இன்றைய கல்வி முறையை தெளிவுப்படுத்துகிறார்

 

** கல்வி என்பது இதமான விஷயமாக இருக்க வேண்டும் நெஞ்சுக்கு இணக்கமான விஷயமாக இருக்க வேண்டும்

 

**சிந்திக்க தெரியாதவனை மன்னிக்கலாம்.ஆனால் சிந்திக்க மறுப்பவனை மன்னிக்க முடியாது.

 

** தேசத்தில்

பற்றும் தீ

தன் சட்டையில் பற்றும் வரைக்கும்

எவனும்

சப்தம் இடுவதில்லை...!

என்று கூறி பொதுநலத்திற்கு வித்திடுகிறார்.

 

** சில எதிர்ப்புகளைக்கண்டு நீ சிரித்து விட வேண்டும்

சில எதிர்ப்புகளைக்கண்டு நீ எரித்து விட வேண்டும்

 

** ஓய்வு என்பது புலன்களை மறக்கடிப்பதல்ல; புலன்களை புதுப்பிப்பது

 

** ருசிக்காக சாப்பிடுவதை விட பசிக்காக சாப்பிடு

 

** இலக்கியம் என்பது உன் அன்றாட வாழ்க்கையின் அம்சம் என்பதன் மூலம் இலக்கியத்தை நேசிக்க வைக்கிறார்

 

**இந்த நூலை சோர்வடையும் போதெல்லாம் படிக்கும் போது மனதிற்கு ஒரு தெளிவு பிறக்கிறது

 

** கண்டீப்பாக இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும் இது பயனுள்ள தன்னம்பிக்கையூட்டும் நூல்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

  இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments