*தினம் ஒரு புத்தகம்* - வன வாசம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:108

தேதி:11-11-2022

புத்தகம் எண்ணிக்கை:108

புத்தகம்வன வாசம்

ஆசிரியர்: கவியரசு கண்ணதாசன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**கவிஞர் கண்ணதாசன் எழுதிய அவரின் வாழ்க்கை வரலாற்று நூல் வனவாசம்  கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.

 

**இந்த புத்தகம் 424 பக்கங்கள் கொண்டது. 64 கட்டுரைகளையும் உடையது

 

**படிக்க ஆரம்பித்ததும்..என்னால்  புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. மிக அழகான தெளிவான மனதைக்கவரும் நடை.

 

**எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இது நூலல்ல; எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி" என்ற முன்னுரையுடன் துவங்குகின்றது கண்ணதாசனின் சுயவாழ்க்கை வரலாறான "வனவாசம்". 

 

**வாழ்க்கை வரலாறு என்பதனால், சிறுவயது பள்ளி அனுபங்கள் மற்றும் வீட்டை விட்டுப் நகரத்திற்கு ஓடி வந்த அனுபவங்கள் என்று பல அனுபவங்களைக் குறிப்பிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த தன் பத்தாண்டு அனுவங்களையே வனவாசம் என்று குறிப்பிடுகின்றார் கண்ணதாசன்

 

**சிறு வயது முதலே அடுத்தவர்களின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஒரு தீராத ஆசையுடன் படைப்புலகில் நுழையும் கண்ணதாசன்எத்தனையெத்தனையோ பத்திரிகைகளிலும் பணிபுரிகின்றார். அங்குதான் எத்தனை மனிதர்கள், எத்தனை அனுபவங்கள் 

 

** தன் வாழ்க்கை நிகழ்வுகளை சுவைபட

சிலரால் மட்டுமே எழுத முடியும்.

 

** கவிஞன் ஒரு காலக்கணிதம் என்பதை 

கவியரசரின் வாழ்க்கை நிகழ்வு மூலம் உணரலாம்.

 

**தன் வாழ்க்கை நிகழ்வுகளில் நடந்தவற்றை

கூறி மற்றவர்கள் விழிப்பாக இருக்க அறிவுறுத்துவது மிக அருமை.

 

** கலங்காதிரு மனமே

உன் கனவுகள் எல்லாமே விரைவில் நிறைவேறும் என தனக்குதானே ஆறுதல் கூறுதல்.

 

**மனம் தளராமை,விடாமுயற்சி, எதையுமே எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments