ஓர் எளிய அறிமுகம் ஆசிரியர்:சுஜாதா

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*  

*நெஞ்சார்ந்த நன்றிகள்*

 *75 வது நாள் பதிவு*

தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம் பதிவிட ஆரம்பித்து இன்றுடன் 75நாட்கள் முடிவடைகிறது.

75நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திய முழு மனநிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது.எனக்கு இந்த 

பதிவை எழுத ஊற்சாகம் ஊட்டி எனை மேலும் எழுத ஆர்வமூட்டிய எனக்கு கற்பித்த பேராசிரியர்கள்,எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், நண்பர்கள்,முகநூல்,வாட்ஸ்அப் நண்பர்கள் ,வழிகாட்டிகள் ,குடும்பத்தினர்,உறவினர்கள்,என் உடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகப்பதிவினை வலைதளத்தில் பதிவிடும் அன்பு நண்பர் பா.திரு குமரேசக்கனி - www.kanimaths.com அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

"எனக்கு கற்பித்த ஆசிரியர்களால்தான் எதுவுமே எனக்கு சாத்தியம்"

"ஆசிரியர்களால் நான்"

 

*75 வது தினப்பதிவு*

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:75

தேதி:09-10-2022

புத்தகம் எண்ணிக்கை:75

தலைப்பு: புறநானூறு- ஓர் எளிய அறிமுகம்

ஆசிரியர்:சுஜாதா

 

**தமிழின் பழம்பெரும் இலக்கியப்பொக்கிசமான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.

 

** முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிறது.

 

** சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது.

 

** புறநானூறு பாடல்களுக்கு மிக எளிய நடையில் விளக்கம் தந்துள்ளார்.

 

** தமிழனின் பெருமைகளை, வீரத்தை,காதலை உலகுக்கு உணர்த்துபவை புறநானூறு.

 

**காயாங் குன்றத்து கொன்றை போல

மாமலைவிடரகம் விளங்க மின்னி

மாயோள் இருந்த தேஎம் நோக்கி

வியலிரு விசும்பகம் புதையப் பாய்ப்

பெயல் தொடங்கினாலே பொய்ய வானம்

நிழல்திகழ் சுடர்த்தொடி நெகிழ ஏங்கி

அழல் தொடங்கினளே ஆயிழை அதெனதிர்

குழல் தொடங்கினரே கோவலர்

தழங்கு குரல் உருமின் கங்குவாளே

                   - புறநானூறு

 

** இதற்கு சுஜாதாவின் கவித்துவமான விளக்கம்

 

கருநீல மலர்மரங்களுக்கு இடையில்

சரக் கொன்றைகள் போல மின்னல் மின்னுகிறது

மலை விளிம்புகள் தெரிகின்றன

பெய்யாத மழை பெய்யத் தொடங்கிவிட்டது.

இருள் வருகிறது, இடி உருமுகிறது

இடையர்கள் குழல் ஊதத் துவங்கிவிட்டார்கள்

அவள் தங்கும் இடத்தை நோக்கிச் செல்கிறது மழை.

பயந்து போய் அழ ஆரம்பிப்பாள்

சீக்கிரம் போ

 

**அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் 

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார் 

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில் 

வென்று எறி முரசின் வேந்தர் 

எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே.

                              - புறநானூறு

 

**“அந்த மாதம் அந்த நிலவில் 

அப்பா இருந்தார். கோட்டையும் இருந்தது

இந்த மாதம் இந்த நிலவில் 

வெல்லும் போர் முரசு மன்னர்கள் 

கோட்டையைப் பறித்தார்கள்

அப்பாவும் இல்லைஎன்று மிக அழகாக விளக்கம் தருகிறார்

 

** பண்டைய தமிழர்களின் வீரம்,காதல் போன்றவற்றை தெரிந்து கொள்ள கண்டீப்பாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நால்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments