அம்பேத்கார் இன்றும் என்றும்.

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:97

தேதி:31-10-2022

புத்தகம் எண்ணிக்கை:97

புத்தகத்தலைப்பு:அம்பேத்கார் இன்றும் என்றும்.

பதிப்பகம்: விடியல் பதிப்பகம்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அம்பேத்கர் நூல்களிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு அம்பேத்கர் ஃபவுண்டேஷன் வெளியிட்ட தமிழ் நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

 

**இந்தப் புத்தகம், இந்து மதத்தின் புதிர்கள், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், தீண்டாமை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

 

**முதல் பகுதியில் ஒருவர் தன்னை இந்துவாக கூறிக்கொள்வதில் உள்ள பிரச்சனை, வேதங்களின் உள்ளடக்கம், அவற்றின் நிலை பிற்காலத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டது, இந்துக் கடவுள்கள் ஒருவருடன் ஒருவர் சண்டைபோட்டுக் கொள்வதற்கான காரணம், வேதங்கள் அறநெறி, ஆன்மீகப் பண்பு கொண்டவையா போன்ற கேள்விகளை ஆராயும் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.

 

** இரண்டாவது பகுதியில், பௌத்த சமயத்தின் வீழ்ச்சி பற்றியும், இந்து சமய இலக்கியங்களான பகவத் கீதை, வேதாந்த சூத்திரங்கள், மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் ஆகியவை குறித்தும் அம்பேத்கர் எழுதியவை இடம்பெற்றுள்ளன.

 

** மூன்றாவது பகுதியில் தீண்டாமை குறித்தும் அம்பேத்கர் ஆராய்ந்து எழுதிய எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.

 

**தீண்டாமை குறித்த பகுதியில் இந்துக்கள் இடையே உள்ள தீண்டாமை, இந்து அல்லாதவர்களிடையே உள்ள தீண்டாமை, தீண்டப்படாதவர்கள் கிராமத்திற்கு வெளியில் வசிப்பது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்.

 

**இந்திய அரசியல்சாசன நிர்ணய சபையின் தலைவராக இருந்த அம்பேத்கர் சட்டமேதையாக மட்டும் அறியப்படும் நிலையில், அவருடைய பன்முகத் தன்மையைச் சுட்டிக்காட்டும் வகையிலும் ஜாதி தொடர்பான தாக்குதல்களும் வேறுபாடுகளும் அதிகரித்திருக்கும் தற்போதைய சூழலில் அவருடைய எழுத்துகளின் தேவையை உணர்த்தும் வகையிலும் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது               *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments