ஆசிரியர் கல்வி ஆசிரியர்:மீனாட்சி சுந்தரம்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:92

தேதி:26-10-2022

புத்தகம் எண்ணிக்கை:92

புத்தகத்தலைப்பு:ஆசிரியர் கல்வி

ஆசிரியர்:மீனாட்சி சுந்தரம்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**ஆசிரியர்கல்வி, கல்விமுறையுடன் இணைந்ததோர் அங்கமாகும். ஆசிரியர் கல்வி பற்றி விரிவாக இந்தநூல் விளக்குகிறது

 

**நம் இந்திய நாட்டிலுள்ள பள்ளிக் கல்வி முறைகளுக்கு ஏற்றவாறு ஆசிரியர் கல்விக்கான திட்டங்களை தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் (NCTE) நிர்ணயம் செய்து வருகின்றது

 

**பள்ளிகளில் மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, உயர்தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி என்ற நிலைகள் உள்ளன

 

**இதற்கு ஏற்றவாறு ஆசிரியர் கல்வியும் பல நிலைகளில் இருத்தல் அவசியமாகும். கல்வியின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழும் ஆசிரியர், தன் தொழில் அறத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும்

 

**ஆசிரியர் கல்வி வெறும் பணிப் பயிற்சியன்று. ஒர் ஆசிரியர் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் மிகச் சிறப்பாக நிறைவேற்றத் தேவையான மனப்பான்மை, பண்புநலன்கள் அறிவு, திறன்கள், ஆற்றல் ஆகியவற்றைப் பெற வழிவகுப்பதே ஆசிரியர் கல்வி ஆகும்

 

**ஆசிரியர் கல்வி என்பது ஆசிரியரின் மனப்பான்மைகள் பழக்க வழக்கங்கள், நுட்பதிட்பங்கள், ஆளுமைப் பண்புகள், கண்ணியம் போன்றவற்றை வடிவமைக்கும் இயல்பான அணுகுமுறைகள் ஆகும்.

 

** “ஆசிரியர்கல்வி என்பது, மழலையர்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிப்பதற்குத் தேவையான திறன்களைப் பெற்றவர்களாக மனிதர்களை உருவாக்கும் கல்வி நிகழ்ச்சிகள், ஆய்வுகள் அல்லது பயிற்சிகள் எனலாம்.

 

**பணி முன் ஆசிரியர் கல்வி என்பது மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களை உருவாக்கும் கல்வி நிகழ்ச்சிகள் ஆகும்.

 

**பணியிடை ஆசிரியர் கல்வி என்பது பணியிலுள்ள ஆசிரியர்களின் / பணி சார் திறன்களை மேம்படுத்த இடையிடையே அளிக்கும் பயிற்சிகள் ஆகும்.

 

** ஆசிரியர்களுக்கான தகுதிகள்,விதிமுறைகள்,பணிகள் போன்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது

 

** மத்திய,மாநில அரசின் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் பற்றியும் விளக்குகிறது. *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments