உனக்குப் படிக்கத் தெரியாது ஆசிரியர்: கமலாலயன்

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:43

தேதி:07-09-2022

புத்தகம்:43

புத்தகம்: உனக்குப் படிக்கத் தெரியாது

ஆசிரியர்கமலாலயன்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


**கனவு காணுங்கள்

விழிகள் திறக்கும் வரையல்ல..!

இலட்சியத்திற்கான

வழிகள் திறக்கும்வரை..!

என்பதை போல சிறு வயதில் கல்வி கற்க வேண்டும் என்ற கருப்பின சிறுமியின் இலட்சியங்கள் நிறைவேறிய நிகழ்வுகளின் தொகுப்பு.

 

** போராடினால் உண்டு பொற்காலம்..!

போராட்டமே விடியலுக்கான வழி..!

கல்விக்கான போராட்டம் தலைமுறைக்கான போராட்டம்..!

 

** தான் மட்டும் கல்வி கற்றதோடு தன்னைப்போன்ற பலரும் கல்வி கற்க வேண்டும் என தன்நலம் கருதாமல் பொதுநலம் கருதி வாழ்ந்த மேரி பெத்யூன் இன்றைய பெண்கள் பின்பற்ற வேண்டிய முன்உதாரணம்

 

**ஒரு ஏழை அமெரிக்கக் கருப்பினச் சிறுமியை, ஒரு பணக்கார வீட்டு வெள்ளையினச் சிறுமி , “ உனக்குப் படிக்கத் தெரியாதுஎன்று ஏளனம் செய்கிறாள். இந்த அவமரியாதை அந்தக் கருப்பினச் சிறுமியின் மனதைத் தொட்டது, தீயாய் சுட்டதுதன் தலைமுறையில் மட்டுமல்ல, தன் பகுதியிலும் யாரும் இதுவரை  பெற்றிடாத கல்வியைப் பெற வேண்டும், எழுதப்படிக்கத் தெரிந்து கொள்ள  வேண்டும் என்ற ஆவல் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் உள்ளத்தில் நெருப்பாய் தகிக்கிறது. உள்ளத்தின் உள்ளே இயல்பாய் முகிழ்த்து வந்த ஆசை நடந்தேறுகிறது. படிக்கிறாள்…. தொடர்ந்து படிக்கிறாள்…. தான் உயர்ந்தது போலவே தன் கருப்பினத்தைச் சேர்ந்த பலரும் கல்வி பயில வேண்டும் என நினைத்து பள்ளியை நடத்துகிறார். இப்பள்ளி பின்காலத்தில் ஒரு கல்லூரியாக வளர்ச்சி பெறுகிறது. இப்பெண்மணி 

 

**யார் இவர்?

அவர் பெயர்  இள வயதில் மேரி  ஜேன் மெக்லியோட்இறுதிக்காலத்தில்  மேரி மெக்லியோட் பெத்யூன். இவரின் சாகசம் மிகுந்த வாழ்க்கை வரலாறேஉனக்குப் படிக்கத் தெரியாதுஎன்னும் இந்நூலாக விரிகிறது.

 

**இந்நூல் வெறும் ஒரு கருப்பினப் பெண்மணியின் கல்விக்கானப் போராட்டம் மட்டுமல்ல, எங்கெங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கல்வி மறுக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் நிகழ வேண்டிய கல்விப் போராட்டத்திற்கான ஒரு வழிகாட்டி மேரி பெத்யூனின் வாழ்க்கை.

 

** ஒருவரின் ஆழ்மனதில் பதியும் எண்ணம் தகுந்த முயற்சி இருந்தால் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நூல் ஒரு மகத்தான உதாரணம்

 

** கல்வி சமூக மாற்றத்திற்கான திறவுகோல்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments