காலந்தோறும் கல்வி ஆசிரியர்:முனைவர்.என்.மாதவன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்தபுத்தகம்*

நாள்:39

தேதி: 03-09-2022

புத்தக எண்ணிக்கை:39

புத்தகத்தலைப்பு:காலந்தோறும் கல்வி

ஆசிரியர்:முனைவர்.என்.மாதவன்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.           


**காலந்தோறும் கல்வி என்னும் இப்புத்தகம் ஆசிரியர், தலைமையாசிரியர்,கல்வியாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க முக்கிய ஆளுமை, கவிஞர், கதை சொல்லி,தன்னம்பிக்கை பேச்சாளர்,குழந்தைகள் நேய கல்வியாளர் என்னும் பல பன்முக ஆளுமை கொண்ட ஐயா என்.மாதவன் அவர்களால் எழுதப்பட்டது.

 

**இந்நூல் நீண்ட கால கல்வி வரலாற்றைச் சுருக்கமாகத் தரும் முயற்சி

 

**நான்கு பகுதிகளைக் கொண்டது

 

**முதலாவது பகுதியான.    “ கல்விஎன்னும் தலைப்பில் கல்வியின் நோக்கங்களையும், இந்த சமூகத்தில் கல்வியின் தேவையையும் விவரிக்கிறார். இச்சமூகத்தில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறார். இந்த அதிகாரம் பரவலாக்கப்பட ஒரு நாட்டில் தழைக்கும் ஜனநாயகமும், கல்விப்பரவலுமே கை கொடுக்கிறது என்கிறார்.

 

**நூலின் இரண்டாவது  பகுதிபள்ளிகளின் பரிணாமம்என்பது, இதில் உலக நாடுகளில் மன்னராட்சி காலம் தொட்டு இப்போதைய மக்களாட்சி காலம் வரை பள்ளி என்னும் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்  சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.

 

*"மூன்றாவது பகுதியின் தலைப்புஇந்தியாவில் கல்விப் பரவல்என்பதாகும்.

 

 **நான்காம் பகுதி முழுவதும் கல்வியின் வளர்ச்சிக்கும், அனைத்து குழந்தைகளையும் கல்வி பெற வேண்டும் என்னும் இலக்கை அடையவும் ஒரு தேர்ந்த கல்வியாளராய் ஐயா மாதவன் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

 

**மாணவர்கள் கேள்விகள் கேட்டு கேள்வியின்

நாயகர்களாக இருக்கவேண்டும்.

 

**மாணவனே

குனிந்தால்

பாடப்புத்தகத்தைப்படி...!

நிமிர்ந்தால்

உலகப்புத்தகத்தைப்படி...!

 

**உடல் உள்ளம் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும் கல்விமுறை

 

** குழுமனப்பான்மையோடு செயல்படல்

போன்ற கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments