*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - படிப்பது சுகமே

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:15

தேதி:11-8-2022

புத்தகம் எண்ணிக்கை:15

புத்தகத்தலைப்பு: படிப்பது சுகமே

ஆசிரியர்:வெ.இறையன்பு

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


**பள்ளி செல்லும் மாணவர்கள் எப்படி தங்கள் நேர மேலாண்மையை கடைபிடிப்பது, தேர்வில் எப்படி பயத்தை தவிர்ப்பது, சரியான திட்டமிடல் என்றால் என்ன? போன்ற பல வழிமுறைகளை கூறும் இந்நூல்.. தேர்வில் எப்படி அதிக மதிப்பெண் எடுப்பது போன்ற குருட்டுத்தனமான ஆலோசனைகளை கொடுக்கவில்லை. காரணம் இந்த புத்தகம் படிப்பதை தவமாக செய்ய சொல்கிறதே தவிர படிப்பதை கடமையாக செய்ய சொல்லவில்லை

 

**மதிப்பெண்கள் எடுப்பதற்காக படிக்கும் படிப்பு அடுத்த கணமே மறந்து போகும் என்றும், அதனால்தான் தேர்வில் பலர் தோல்வி கண்டு மனம் துவண்டுப் போவதாக இந்நூல் விளக்குகிறது

 

**தேர்வு என்பது நமது படிப்பறிவை படித்த செய்திகளை நாம் உள்வாங்கிக் கொண்டதை சோதிக்கும் களமாக அமையவேண்டும். மாறாக தற்போது அனைவரும் தேர்வுக்காக படிக்கின்றனரே தவிர யாரு படித்ததற்காக தேர்வு எழுதுவதில்லை என்கிற கருத்தை ஆணித்தரமாக கூறும் இந்நூல் மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்

 

** படிப்பதற்கான பயிற்சி இந்நூல் மூலம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்.

 

**எண்ணத்தில் தெளிவும் உறுதியும் இருப்பவர்கள் அதிக அடித்தல், திருத்தல் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். கடைசி நேரத்தில் படிப்பது குழப்பத்தை விளைவிக்கும். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று எண்ணித் தேர்வு எழுத வேண்டும். படிப்பது ஒரு நாளும் பாழாவதில்லை. நம்மை சுற்றியுள்ளவர்களின் உதடுகளில் புன்னகையைச் சேர்ப்பதே படிப்பின் முக்கிய நோக்கம்.

 

** உண்மையிலேயே இந்நூல் தேர்வுக்கான திறவுகோல்தான். இந்நூலைப் படிப்பவர்கள் வெற்றிப் படிக்கட்டுகளை அமைத்துக் கொள்வார்கள் என்பது உறுதி

 

**தேர்வை எப்படி அணுக வேண்டும் என்கிற யுத்தி கல்விக்கூடங்களில் சரியாகக் சொல்லித்தரப்படுவது இல்லை. படித்ததையெல்லாம் எழுதுகிற பயிற்சியாக தேர்வு கருதப்படுகிறதேயொழிய தேவையானவற்றை வெளிப்படுத்துகிற பரிசோதனைக்கூடமாக அதை மாணவர்கள் கருதுவதில்லை. இந்நிலையை மாற்ற பல்வேறு தேர்வுகள் குறித்தும் தேர்வுக்கு புத்தகங்கள் சேகரிப்பது, விடைகளைத் தயாரிப்பது, வினாத்தாள்களை எதிர்கொள்வது போன்ற பல முக்கியமான செய்திகளை முறையாக சொல்லித் தருகிற நூலாக இது உள்ளது

 

** பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301



          2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments