*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - கரும்பலகைக்கு அப்பால்

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:2

தேதி:28-07-2022

புத்தகம் எண்ணிக்கை:2

புத்தகத்தலைப்பு:கரும்பலகைக்கு அப்பால்

ஆசிரியர்: கலகல வகுப்பறை சிவா


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


** உலகெங்கிலும் வெளிவந்த ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்களின் வழியாக மாணவர்-ஆசிரியர் உறவை, இன்றைய கல்வியின் நிலையைப் பல கோணங்களில் விளக்குகிறதுகரும் பலகைக்கு அப்பால்…’ புத்தகம்.

 

** திரைப்படங்களால் சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பது உண்மை என்றால் நேர்மறைத் தாக்கங்களையும் ஏற்படுத்த முடியும் என்ற பார்வையில் மாற்றங்களை விரும்பும் ஆசிரியர் கலகலவகுப்பறை சிவா எழுதியிருக்கும் புத்தகம் இது.

 

**குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடைப்பட்ட குழப்பமான மனநிலையில் வளரிளம் பருவத்தினர் சிக்கித் தவிப்பார்கள். அப்பருவத்தில் இருக்கும் மாணவர்களைத் தான் சொல்வதை எல்லாம் கேட்கச் செய்வது ஆசிரியரின் வெற்றி அல்ல. அனுபவ அறிவு, நுண்ணறிவைப் பயன்படுத்தி அவர்களை மடைமாற்றுவதே ஆசிரியர் பணி என்பது 2012-ல் வெளிவந்த ‘Last Bench’ என்ற மலையாளத் திரைப்படத்தின் வழியாக இதில் பேசப்பட்டிருக்கிறது.

 

**2010-ல் வெளிவந்த ‘Waiting for Superman’ என்ற ஆங்கில ஆவணப்படத்தை விவரிப்பதன் மூலமாக அமெரிக்காவின் அரசுப் பள்ளிகளுக்கும் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் இடையிலான வித்தியாசம் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது

 

**இந்தி, மலையாளம், ஆங்கிலம், சீனம், கொரியா உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த சில திரைப்படங்களை அடிப்படையாக  வைத்துக் கல்வி அரசியலை இப்புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் அலசுகிறது.

 

**மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக ஆசிரியர்கள் தங்களை செதுக்கிக்கொள்ள இத்திரைப்படங்கள் கண்டீப்பாக உதவும்

 

**ஆசிரியர்கள் என்பவர்கள் கற்பிப்பவர்கள் அல்ல..!

கற்றுக்கொள்பவர்கள்..!

 

**பாடத்தை நடத்துவது மட்டுமல்ல ஆசிரியர் பணி மாணவர்களை பண்படுத்துவதே ஆகும்.

 

**மாணவர்களை மதிப்பெண்கள் பெற வைப்பதை விட மனிதநேய உணர்வு உள்ளவராக வளர்ப்பதுவே ஆசிரியர் பணி என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments