*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்* - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:23

தேதி:18-08-2022

புத்தகம்:23

தலைப்பு: முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

ஆசிரியர்நா.முத்து நிலவன்

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.     


**உங்கள் பிள்ளைகளை முதல் மதிப்பெண் வாங்க வைப்பது எப்படி என்ற நூல்களுக்கு மத்தியில் முதல் மதிப்பெண் எடுக்காதே மகளே என்ற புத்தகம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

 

**இன்றைய கல்வி எதிர் கொள்ளும் பல பிரச்சனைகள் குறித்தும் அச்சமின்றி தன் சிந்தனையில் விளைந்த கருத்துக்களை 18 கட்டுரைகளாக எழுதியுள்ளார் நா.முத்து நிலவன் அவர்கள்.

 

**வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம்...!

கல்வி சுமையாகிறது....!

வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை 

விருந்துபோலத் தருகிறோம்...!

வாழ்க்கையே சுமையாகிறது.

 

**தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல் 

வேற்று மொழிக்குத் தங்களை

அடிமையாக்கிக் கொண்டவர்கள் 

தமிழ்நாட்டில் இருக்குமளவு

வேறுநாட்டில் இல்லை.

 

**MBBS படித்தால் மருத்துவர் ஆகலாம்

BE படித்தால் பொறியாளர் ஆகலாம்

BL படித்தால் வழக்குரைஞர் ஆகலாம்

IAS படித்தால் மாவட்ட ஆட்சியர் ஆகலாம்

எதுவுமே படிக்காமல் மந்திரி ஆகலாம்

ஆனால் என்ன படித்தால் மனிதர் ஆகலாம்?

மனிதரைப் படித்தால் நாமும் மனிதராகலாம்.

என்பது எனது நம்பிக்கை.

 

**குழந்தைகளை மருத்துவராகவும்,பொறியாளராகவும்,

வழக்குரைஞராகவும் வரவேண்டும் எனும் கனவில் அவர்கள் மனிதனாகவும் இருக்கவேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள் பல பெற்றோர்கள்.

 

** கல்வி முறையில் கை வைக்காமல் சமூகமாற்றம் சாத்தியமேயில்லை.

 

** மதிப்பெண் எடுக்கும் பயிற்சியை மட்டுமே தருவதுதான் பள்ளிக்கூடத்தின் நோக்கமா ?

மதிப்பெண் ஒரு பகுதிதான்.

 

** முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே

புத்தகத்தின் தலைப்பே புத்தகத்தை நோக்கி நம் கண்களை ஈர்க்கிறது.

 

** மனப்பாட கல்வியை விட மனிதநேயக்கல்வியே இன்றைய உலகுக்கு தேவை.என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது.

 

** குழந்தைகளை மதிப்பெண் இயந்திரங்களாக மாற்றாமல் மலர்களைப்போல் மிக மெல்லிய அவர்களின் இதயத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும் புத்தகம்

 

** கல்வியை கல்வியாய் பார்க்க  உதவும் புத்தகம்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments