நாய்வால் சங்கிலிக் கதைகளும் ஓசைக்கதைகளும் ஆசிரியர் :ச. மாடசாமி



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:181

தேதி:23-01-2023

புத்தகம் எண்ணிக்கை:181    

புத்தகத்தின் பெயர் : நாய்வால் சங்கிலிக் கதைகளும் ஓசைக்கதைகளும் 

ஆசிரியர் :ச. மாடசாமி 

பக்கங்கள் : 96 

விலை : 80

பதிப்பகம் : வாசல் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*வீட்டுக்கல்வி வரிசையில் வாசல் வெளியிடும் புத்தகம் 

 

*இந்தக்கதைகள் குழந்தைகளின் மனஉலகை புரிந்து கொண்டு உருவாக்கப்பட்டவை 

 

*இவை குழந்தைகள் வாசிப்பதற்காக அல்ல குழந்தைகளுக்கு சொல்வதற்காக உருவாக்கப்பட்ட கதைகள் 

 

*வீட்டுக் கல்வியைத்தொடங்குவதற்கு மிகவும் பொருத்தமான முதல் நூல் இது 

 

*முதல் மூன்று வயது முதல் ஏழு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சொல்லக் கூடிய கதைகள் இவை 

 

*ஒரு நாளைக்கு ஒருக்கதை என்பது பொருத்தமாக இருக்கும் ஆனால் அதை தீர்மானிக்கும் முடிவு உங்களிடம் உங்கள் குழந்தைகளிடமும் தான் உள்ளது

 

*கதை சொல்லும்போது புத்தகம் குழந்தையின் மடியில் இருந்தால் இந்த புத்தகத்தில் உள்ள படங்களை பார்த்து குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள் 

 

*குழந்தைகள் கதைகளை கேட்கும்போது அவர்களுக்கு இயல்பாக புதுப்புது சொற்கள் அறிமுகம் ஆகும் 

 

*குழந்தைகள் கதைகளை கேட்கும் போது புதிய அனுபவங்களை பெறுவார்கள் வாழ்வியல் அறங்களை மிக எளிதாக கதைகளின் வழியே உணர்த்த முடியும் என்பதை விளக்கும் நூல் இது 

 

*இந்த கதைத்தொகுதியில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன 

 

*"நீங்கள் சத்தத்தை விரும்பவில்லையா அப்படி ஆனால் நீங்கள் ஒரு ஆசிரியரே கிடையாது" என்கிறார் ஸில்வியா 

 

*கதைகளை கற்பிக்கும் போது அல்லது குழந்தைகளிடம் கதைகளை சொல்லும்போது அதில் வரும் விலங்குகளை போல ஆசிரியர் ஒலி எழுப்பிக்கற்பித்தால் குழந்தைகள் கூர்ந்து கவனிப்பார்கள் அவர்கள் சிந்தனை திறன் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என்பதை இந்த நூலின் மூலம் விளக்குகிறார் 

 

*பாடங்களை பாடங்களாக கற்பிக்காமல் கதைகளின் மூலம் சிறு கருத்துகளாக கற்பிக்கும் போது இயல்பாக மாணவர்கள் மனதில் பதிந்து விடும் என்பது இந்த நூலாசிரியரின் ஆய்வுப்பூர்வமான உண்மையாகும் 

 

*குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் அறநெறியுடன் வாழ வைக்க அல்லது வாழ் வாழ்க்கை நெறிகளை கற்றுக் கொடுக்க கதைகளை சொல்லுவது மிகப் பொருத்தமானது

 

* கண்டிப்பாக குழந்தைகளுக்கு பரிசாக வழங்கக்கூடிய மிகச்சிறந்த நூல் இது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments