வைகை நதி நாகரீகம் ஆசிரியர் :சு வெங்கடேசன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:187

தேதி:29-01-2023

புத்தகம் எண்ணிக்கை:187

புத்தகத்தின் பெயர்: வைகை நதி நாகரீகம் 

ஆசிரியர் :சு வெங்கடேசன் 

பக்கங்கள் :152 

விலை : 210 

பதிப்பகம் : விகடன் பதிப்பகம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*இது புனைவெழுத்தல்ல ஆயினும் புனைவே இல்லாத எழுத்தும் அல்ல 

 

*வைகை நதிக்கரையின் இரு மருங்கிலும் தொல்லியல் துறையினர் தோண்டத் தோண்ட வெளிப்பட்டு எழுந்து நின்ற குத்துக்கற்கள், பனை ஓடுகள் ,தந்ததால் ஆன தாயக்கட்டைகள் ,எழுத்துக்கள் குறித்த எண்ணற்ற தொல் எச்சங்கள் வரைந்து வைத்த புனையா ஓவியத்தின் மீது வெங்கடேசன் தன் புனைவென்னும் வண்ணம் குழைத்து நமக்குத் தீட்டித் தந்திருக்கும் வரலாற்றுக் கோலங்கள் இவை இதை வரலாற்று ஆவணம் என்பதா ? அறிவியல் புனைவு என்பதா ?ஆகச்சிறந்த வாழ்க்கைச் சித்திரம் என்பதா ?

 

* இந்தப் புத்தகத்தை வாசிக்க வாசிக்க கோதை மட்டும் அல்ல கனவு கண்ட வாழ்வு சிதைந்த ஆவேசத்துடன் கையில் ஒற்றைச் சிலம்புடன் கண்ணகியும் நம்மை நோக்கி நீதி கேட்டு வருகிறாள் 

 

*வைகை நதி நாகரிகம் நகரத்தைப் பற்றியும் நாகரிகத்தை பற்றியும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

 

*எழுத்துக்கள், ஆவணங்கள் ,சான்றுகள் ,மரபுகள் ,சாட்சியங்கள் ,இலக்கியங்கள் ,காப்பியங்கள் ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி 2400 ஆண்டுகளுக்கு பழமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தை பதிவு செய்கிறது 

 

*மதுரை என்பது ஒரு நகரத்தின் பெயர் மட்டுமல்ல தமிழ் மொழியின் தமிழ் பண்பாட்டின் தமிழ் இலக்கியத்தின் முகம்  அது நிலத்தைக் குறிக்கும் சொல்லாக மட்டுமல்லாமல் தமிழர்களின் நினைவை குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது 

 

*மனிதக் குலத்தின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரையில் ஈர மணலில் தான் தொடங்கின 

 

*ஜீவநதி இல்லாத வரளும் நதிக்கரையிலும் நாகரீகம் தலை துவங்கும் என்பதற்கானச் சான்று வைகை நதி நாகரிகம் ஆகும் 

 

*மத்திய தொல்பொருள் அகழ்வாய்வுத்துறை அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு வைகை நதியின் தொடக்கமான வெள்ளிமலையிலிருந்து அது வங்கக்கடலில் கலக்கும் அழகன்குளம் ஆற்றங்கரை வரை அகழ்வாய்வு செய்தது 

 

*இந்தியாவைப் பற்றி வெளிநாட்டவர் எழுதிய முதல் நூல் இண்டிகா 

 

*கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அழகாகப் படம் பிடித்து வண்ணப் படங்கள் இந்த புத்தகம் முழுவதும் நிறைய படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது 

 

*கீழடி பற்றி வரலாற்று ஆவணமாக வரலாற்றுக்காப்பகமாக வரலாற்றுப் பெட்டகமாக இந்தப்புத்தகம் விளங்குகிறது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments