கல்வியில் மலர்தல்


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:165

தேதி:07-01-2023

புத்தகம் எண்ணிக்கை:165

புத்தகத்தின் பெயர் :கல்வியில் மலர்தல்

பக்கங்கள் : 68

விலை : 70

பதிப்பகம் :தன்னறம்- குக்ககூ காட்டுப்பள்ளி

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


                *கற்பித்தல் முறை பாடத்திட்டம் ,கால அட்டவணை என்ற இவை எல்லாம் பொருளற்ற சொற்கள் பிள்ளைகள் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது தவிர வேறு ஏதும் பயனில்லை 

 

*வினோபா பாவே அவர்களின் கல்வி கருத்துக்கள் வாழ்வியலை உணர்த்தும் கல்வியினை வெளிப்படுத்துகிறது 

 

*வாழ்வுக்காக நடைபெறும் செயல்களின் மூலமே கல்வி கிடைக்க வேண்டும் 

 

"புத்தக கருத்துக்களை மூளையில் புகுத்துவதனால் மனிதன் அறிவாளி ஆகிவிட முடியுமானால் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரிகள் எல்லாம் அறிவாளி ஆகிவிடும் 

 

*கல்வி என்பது நிறைப்பதல்ல நிறைவு தருவதே ஆகும் 

 

*வகுப்பறைக்குள் இருக்கும் ஒரு குழந்தை ஜன்னலில் வானத்தை நோக்கி பார்ப்பது  கூட கல்வியின் ஒரு பகுதிதான் 

 

*வாழும் வாழ்க்கையின் சூழலே கல்விக்கான சூழலாக அமைய வேண்டும் 

 

*தம்மை காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் என்று காந்தி இவரைப் பற்றி கூறியுள்ளார் 

 

*வினோபாவா தன் வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கிலோ மீட்டர் மையில் கால்நடையாக நடந்து பூதன இயக்கத்தை வழி நடத்தியுள்ளார் 

 

*ரூசோவின் கல்வி பிரிவுகள் இயற்கை கல்வி, தனிமனிதன் கல்வி ,நடைமுறை கல்வி நம் இயல்பு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் எனில் நம்முடைய நடவடிக்கைகளை அதே வரிசையில் கொண்டு வர வேண்டும் சிறு வயதிலிருந்து அதற்கான கற்றல் நிகழ வேண்டும் எளியதை பார்த்து அகம் மகிழும் மனநிலையை அதற்கான முதல் படி 

 

*ஒரு விஷயம் உண்மையாக இருக்கும்போது அதை ஆதரிக்கும் எந்த ஒரு விவாதத்தையும் ஆதரிக்க எந்த ஒரு விவாதத்தையும் பயன்படுத்த அவசியமில்லை. 

 

*கருத்து சுதந்திரத்துடன் கூடவே சரியாக சிந்திக்கும் முறையும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும் 

 

"நதி தனது சொந்த விருப்பப்படி பாய்கிறது ஆயினும் வெள்ளம் இரு கரைகளுக்குள் கட்டுப்படும் இது கட்டாயமாக இல்லாவிட்டால் நதியின் சுதந்திரம் வீணாகிவிடும்

     

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments