வகுப்பறையின் கடைசி நாற்காலி ஆசிரியர் : ம.நவீன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:167

தேதி:09-01-2023

புத்தகம் எண்ணிக்கை:167

புத்தகத்தின் பெயர் : வகுப்பறையின் கடைசி நாற்காலி

ஆசிரியர் : ம.நவீன்

பக்கங்கள் : 95

விலை: 70

பதிப்பகம்: புலம்

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

* மலேசிய எழுத்தாளர் மற்றும் பள்ளி ஆசிரியர் நவீன் அவர்களின் படித்த கல்லூரி  மற்றும் பணிபுரிந்த பள்ளிகளில் ஏற்பட்ட அனுபவங்களின்  தொகுப்பே இந்தப் புத்தகம் ஆகும்.

 

*மலேசியப் பள்ளிகளும் தமிழகப்பள்ளிகளைப் போன்றே மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி ஓடும்பந்தய குதிரைகளாகவே வைத்துள்ளது என உணர முடிகிறது.

 

*புத்தகங்கள் மற்றும் வகுப்பறையை தாண்டியும் மாணவர்களை செயல்பட அனுமதிக்க வேண்டும்என்பதை அழகாக சுட்டிக்காட்டுகிறது இந்தப்புத்தகம்.

 

*மாணவர்களிடம் ஏற்படும் மனம் மற்றும் உடல்சார்ந்த பிரச்சனைகளையும் ஆசிரியர் உணர வேண்டும் என்பதையும், மாணவர்களின் சுயகற்றலுக்கும்,தனித்திறன்களுக்கும்வாய்பளிப்பதாக கற்றல் கற்பித்தல் முறையும், பாடதிட்டமும் அமைய வேண்டும் என்பதையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது்

 

*நமது பள்ளிகளில் கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்களை‘மாப்பிள்ளை பெஞ்ச் அல்லது 'படிக்காத மாணவர்கள்’  என்போம் மலேசியாவிலும் 'கடைசி நாற்காலி' என்பார்கள் போலிருக்கிறது. எங்கே இருந்தால் என்ன? எல்லா நாட்டிலும் ஒரே நிலைதான்

நிறைய மதிப்பெண் எடுத்த மாணவர்கள், போட்டிகளில் வென்ற மாணவர்களை எனது மாணவன், எனது பயிற்சி என பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், தேர்வுகளில் தோல்வி அடைந்த, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை கைவிட்டுவிடுகிறோம் என்ற ஆழ்ந்த மன வேதனையின் வெளிப்பாடே இந்த நூலிலுள்ள 23 கட்டுரைகளும் ஆகும்.        எனக்குப் பிடித்த கட்டுரை ' மரம் ஏறும் யானைகள்' என்பது ஆகும்.

 

*கால்பந்தாட்டத்தை மைதானத்தில் சொல்லித்தராமல் விளையாட்டு பாடவேளையில் வகுப்பறையில் கரும்பலகையில் மைதானத்தை வரைந்து கற்பிப்பது மிகவும் கவலைக்குரியது. 

 

* பல பள்ளிகளில் கரும்பலகையில் கூட விளையாட்டு பாடவேளையில் விளையாட்டு கற்பிக்கப்படுவது இல்லை பிற பாடங்கள் தான் விளையாட்டு பாட வேளைகளில் கற்பிக்கப்படுகிறது. 

 

* விளையாட்டு பாட வேளை பாட அட்டவணையில் மட்டுமே உள்ளது. 

 

*நூலின் முன்னுரையில் தன்னை'ஒரு பின் தங்கிய ஆசிரியன்' என அறிவித்துக்கொள்ளும் ம.நவீன், இந்நூல் முழுவதும் பின் தங்கிய மாணவர்கள் என பள்ளி  முத்திரை குத்தி, காயப்படுத்திய , வெளியேற்றிய மாணவர்களுக்காகவே உரக்கக் குரல் கொடுக்கிறார். இந்நூலை படிக்கும் போது பேராசிரியர் மாடசாமி ஐயாவின் சிப்ஸ்  கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறார்.

"மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தை வெளி கொணர்வதே கல்வி" என்றார் விவேகானந்தர் அவரின் கூற்றுப்படி ஒவ்வொரு மாணவர்களிடமும் ஏதாவது ஒரு திறமை உள்ளே மறைந்து கிடைக்கும் அதை ஆசிரியர்தான் வெளிக்கொணர வேண்டும் அதை விட்டுவிட்டு மதிப்பெண் மதிப்பெண் படி,படி என்று ஒரே இலக்கை நோக்கி மாணவர்களை தயார் படுத்தக்கூடாது மாணவர்கள் சோர்ந்து விடுவார்கள் அவர்களிடம் உள்ள தனித்திறமைகள் மறைந்துவிடும் இதனையே மையக்கருத்தாக கொண்டு ஆசிரியர் மாணவர்களின் மீது இரக்கப்படுகிறார்

 

*அந்தப் பள்ளியில் மெல்லக்கற்கும் மாணவன் என அறியப்பட்ட  மாணவனின் தந்தை ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருபவர். ஒரு முறை பள்ளி சபை கூடலில் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம், 'செம்மறி ஆடு போல வாழக்கூடாது ' எனக் குறைத்துப்பேச, அந்த மாணவன் எழுந்து செம்மறி ஆட்டின் நற்குணங்களைப் பற்றியும், செம்மறி ஆட்டிற்கும் நாட்டாட்டுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றிச் சொல்ல அசந்து போனது பள்ளி, தலை கவிழ்ந்து போகிறார் தலைமை ஆசிரியர்.

     

*திக்குவாய் என்ற கட்டுரையில்  நூலாசிரியர் சிறுவயதில் திக்குவாயுடன் இருந்து பேசச் சிரமப்பட்டபோது, “ நானும் திக்குவாய் தெரியுமா? சில பயிற்சிகள் மூலம் இப்போது நன்றாக பேசுகிறேன்.அதைப்போல நீயும் முயற்சி செய் என்று தன்னம்பிக்கை கொடுத்த ஆசிரியையை இப்போதும் நன்றிடன் நினைத்துப் பார்க்கிறார், அந்த ஆசிரியை சொன்னது பொய் என்று தெரிந்த பிறகும். சில நேரங்களில் சில நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக  முன்னேற்றத்திற்காக சிறுசிறு பொய்கள் பேசவும் தயங்குவதில்லை என்பதை உணர்த்துகிறார்

 

*'நானும் கல்லூரியும்' என்ற தலைப்பிலான மூன்று கட்டுரைகளில் தனது ஆசிரியர் பயிற்சி அனுபவங்களைப் பட்டியலிடுகிறார். தனது விரிவுரையாளர் தன் குறைகளையும் நிறைகளாக மனம் பாதிக்காதபடி கூறியதை சுட்டிக்காட்டுகிறார்.

ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டாமல் அவர்களிடம் உள்ள நிறைகளை தட்டிக் கொடுத்தால் போதும் அவர்கள் பின் தங்கிய நிலையை அடைய மாட்டார்கள் என்று கூறுகிறார்

 

*  மரம் ஏறும் யானைகள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் நமது கல்வியமைப்பின் முரண்களை எழுதியுள்ளார். அதாவது பறவை, குரங்கு, பெங்குயின்,யானை, மீன், நீர்நாய் , நாய் என வரிசை பிடித்து நிற்க மரத்தில் ஏற வேண்டும் அதுதான் தேர்வு ஆகும் எனக் கூறப்படுகிறது மரத்தில் ஏறத்தெரிந்த விலங்கு மட்டும் மகிழ்ச்சி அடைகிறது மற்ற விலங்குகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறது இந்த கட்டுரையில் அனைவருக்கும் உள்ள ஒரே மாதிரியான தேர்வு முறையின் அவலத்தை சுட்டிக் காட்டுகிறார்

 

*மாணவர்கள் மைய ஆசிரியரான நவீன் மாணவர்கள் எவரும் பின்தங்கியவர் இல்லை மாணவர்கள் எவரும் முட்டாள்கள் அல்ல பாடத்திட்டமும் கலைத்திட்டமும் கல்வித்திட்டமும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் வாழ்க்கையில் மற்ற பகுதி நிறைய இருக்கிறது எனவே மாணவர்கள் படிக்கவில்லை என்பதற்காகவும் மதிப்பெண் பெறவில்லை என்பதற்காகவும் அவர்களை மன ரீதியாக பாதிக்கும் வகையில் ஆசிரியர்கள் செயல்படக்கூடாது என்கிறார்கள்.

 

* மாணவர்களிடம் மறைந்துள்ள நல்ல திறன்களை வெளிக்கொணர்ந்து உலக பள்ளியில் அவர்கள் திறம்பட வாழ்க்கை எனும் பாடத்தை வெற்றிகரமாக கற்றுமுடிக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்ற எண்ணமே இந்த நூலை படித்தவுடன் ஏற்படுகிறது 

 

*இந்தப் புத்தகத்தை கண்டிப்பாக மாணவர்களை விரும்பும் ஆசிரியர்களும் குழந்தைகளை விரும்பும் பெற்றோர்களும் படிக்க வேண்டும் 

 

*நல்ல ஆசிரியர்களுக்கும் நல்ல பெற்றோர்களுக்கும் இந்த நூல் ஒரு படிப்பினை ஆகும் 

 

*மதிப்பெண்களை நோக்கியும் சராசரியை நோக்கியும் ஓடும் கல்வி முறையில் மாணவர்கள் மனதை நோக்கி ஓட இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாகும்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments