*தினம் ஒரு புத்தகம்*
நாள்:169
தேதி:11-01-2023
புத்தகம் எண்ணிக்கை:169
புத்தகத்தின் பெயர் :
பாளையங்கோட்டை ஒரு மூதூரில் வரலாறு
ஆசிரியர்: தொ பரமசிவன்
பக்கங்கள் : 70
விலை : 90
பதிப்பகம் : காலச்சுவடு
பதிப்பகம்
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*பாளையங்கோட்டை
ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கோட்டை நகரம் இந்நகரில் உள்ள பழமையான கோயில்கள்
கோபால சுவாமி என்னும் கோபாலன் கோயிலும் திரிபுராதீஸ்வரர் எனும் சிவன் கோயிலும்
ஆகும் இவ்விரண்டும் ஆகம வழி கற்கோயில்கள்
*கோயில்களில் இருந்து
41 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
*ஊரின் வளமையை அறிய
நமக்கு கிடைக்கும் சான்றுகள் கல்வெட்டுகள்
சில வட்டெழுத்தில்
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
*கோயிலில் உள்ள அனைத்து
கல்வெட்டுகளிலும் ஊரின் பெயர் கீழ்களக் கூற்றத்து ஸ்ரீ வல்லபஙமங்கலம் என்றே
காணப்படுகிறது எனவே இதுவே பாளையங்கோட்டை நகரத்தின் பழைய பெயராகும்
*கோயிலின் பெயர் எல்லா
கல்வெட்டுகளிலும் வீரநாராயண விண்ணகரம் என்றே காணப்படுகிறது
*தாமிரபரணி நதியின்
பழைய பெயர் தண் பொருந்தப் பேராறு என்பதாகும் பேராற்றங்கரையில் அமைந்த செல்வி
அம்மனை பேராற்றுச்செல்வி என பெயர் பெற்றாள்
*பாளையங்கோட்டை என
இப்பொழுது அறியப்படும் நகரத்தில் கோட்டை ஒன்று இருந்ததற்கான தடயங்கள் மட்டுமே
எஞ்சி உள்ளன
* ஐரோப்பிய அறிவொளிக்
காலத்தின் விளைவாக பிறந்த இரேனியஸ் அடிகளே தமிழை நவீன யுகத்திற்கு திருப்பிய முதல்
எழுத்தாளர் எனலாம்
*இரேனியஸ் பற்றி
சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறை ரேனியஸ் "தமிழில் முன்னோடி "என்ற
நூலை வெளியிட்டுள்ளது
*திருச்சபையின்
கணக்குப்படி நெல்லை மாவட்டத்தில் 163 பள்ளிகளை தொடங்கியவர் இரேனியஸ் ஆவார் இவர் மத
போதகர்களுக்கு மாத ஊதியம் வழங்கினார்.அவர்கள் இறந்த பிறகு அவர்களின் மனைவிகளுக்கு
ஓய்வூதியம் வழங்கிய தீர்க்கதரிசி
*பாளையங்கோட்டையில்
உள்ள தாய் தெய்வக் கோயில்கள் அனைத்தும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன
* 1849 இல் தென்னிந்திய
திருச்சபையில் இருந்து நற்போதகம் என்ற இதழ் தொடங்கப்பட்டது இன்றளவும் அது
வெளிவந்து கொண்டிருக்கிறது
*1904 இல் கண்
தெரியாதவர்களுக்காக யோவான் எழுதிய சுவிசேஷம் என்ற தமிழ் பிரைலி எழுத்தில் பாளையில்
வெளியிடப்பட்டது
*பாளையில் சைவ சபை
என்னும் அமைப்பு 1883 முதல் இயங்கி வருகிறது சென்னை மாகாண தமிழ் சங்கம் 1934 முதல்
அரசு ஆதரவுடன் பாளையில் இயங்கி வருகிறது
*1876 இல் ஏற்பட்ட தாது
வருட பஞ்சத்தின் போது ஆங்கிலேய அரசு கைக்குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கியது
இந்த கட்டடம் இன்றளவும் பாலாஸ்பத்திரி என அழைக்கப்படுகிறது
*வீரமிக்க வரலாறை
அறிந்து கொள்ள இந்த நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும்
*பாளையங்கோட்டை
பழங்காலத்தில் இருந்து தற்போது வரை உள்ள அனைத்து வரலாறுகளையும் ஆதாரப்பூர்வமுடன்
துல்லியமாக மிக எளிய நடையில் மனதை கவரும் வகையில் எழுதியுள்ளார்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.