*தினம் ஒரு புத்தகம்* - சீருடை



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:183

தேதி:25-01-2023

புத்தகம் எண்ணிக்கை:183    

புத்தகத்தின் பெயர் : சீருடை 

(ஆசிரியர் குறித்த திரைப்படங்கள் )

ஆசிரியர்: கலகல வகுப்பறை சிவா பக்கங்கள் : 64 

விலை : 50 

பதிப்பகம்:  பாரதி புத்தகாலயம் 

 

 *ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்த ஒன்பது திரைப்படங்களில் விமர்சனமே இந்தப்புத்தகம் ஆகும்.

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*இன்றைய இந்திய கல்வி பல்வேறு சவால்களை சந்திக்கிறது மாணவர்களிடையே ஒழுக்கம் குறைந்துவிட்டது. ஆசிரியர்கள் அச்சத்துடனே வகுப்பறையில் செல்ல வேண்டியது என்பதைப் போல பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள் இதே போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகமும் ஆசிரியர்கள் மீது  சுமத்துகிறது 

 

*இந்த நிலை இன்று மட்டும் நிகழவில்லை பல்வேறு காலங்களில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

 

* பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களை விமர்சனங்களாக  ஆசிரியர் தொகுத்துள்ளார் 

 

* மனம் தளறும்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு இத்திரைப்படங்கள் தூண்டுகோலாக அமையும் 

 

*ஒரு சீருடையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் கதையாகப்படிக்கும் போது நமக்கு கண்களில் கண்ணீர் வருகிறது 

 

*இலவசங்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்லி விடுகிறோம் அதில் அத்தியாவசியமானவையும் இருக்கின்றன என்பதை ஏன் நாம் உணராமல் போனோம் இதைக் கூடவா வாங்க முடியவில்லை என்று சொல்லும் ஆசிரியர்களுக்கு கன்வேஷ் மிகச் சிறந்த படம் 

 

*ஏழைச்சிறுவன் ,காவல் அதிகாரி ,அமைச்சர் மூவரும் உடைப்பற்றி பேசுகிறார் சீருடை வர்க்க குறியீடாக படம் முழுவதும் பல்வேறு நிலைகளில் காட்டப்படுகிறது 

 

*சுதந்திர தின விழாவில் மது பகத்சிங் பற்றிப்பேசும் பேச்சு இன்றைய அரசியலுக்கு சவுக்கடி 

 

*கனடிய பிரெஞ்சு மொழிப்படமான "monsieur lazhar"ஆசிரியர் லாசர் 2011 ஆம் ஆண்டில் வெளியானது பல்வேறு விருதுகளைப்பெற்றது 

 

*குழந்தைகளின் மனதில் இருக்கும் கவலைகளை துக்கத்தைப்பகிர்ந்து கொள்ளும் உறவு தேவை என்பதை எளிய காட்சிகளால் வலிமையாக செல்கிறது இப்படம் 

 

*குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்குள்ளும் இருக்கும் சோகத்தை உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நம்பிக்கையான உறவுகள் வேண்டும் என்று மனித உறவுகளையும் அன்புகளையும் அழுத்தமாக சொல்வதில் ஆசிரியர் லாசர் முக்கிய படம் முக்கியமான படைப்பாக இருக்கிறது 

 

*  மராத்திய மொழியில் கல்வி முறையை திட்டுவது போன்ற தலைப்பு என்ற எதிர்ப்பு சமாளித்து 2010 ஆம் ஆண்டில் வெளியான படம் shikshanachya aaicha gho கதை,திரைக்கதை ,மற்றும் இயக்கம் மகேஷ் மஞ்சுரேக்கர்.

 

* கல்வி முறையின் மீது ஆத்திரமான கேள்விகளை எழுப்புகிறது படம் குழந்தை பருவம் முழுவதும் அழுத்தமும் போட்டியும் நிறைந்த கல்வி முறையால் மானிடப்பண்புகளை வளர்க்கத்தவறிவிட்டோம்

* மனிதம் தழைக்கப் படைப்பாளர்கள் ,கலைஞர்கள் தேவை. பணம் சம்பாதித்து மட்டும் கல்வி அல்ல என பல்வேறு உரையாடல்களும் தொடக்கப் புள்ளியாக இப்படத்தை கொண்டாடலாம் 

 

* இதே கதையை இந்திய மொழியில் பலவற்றிலும் படமாக்கி உள்ளார் தமிழ் தெலுங்கில் தோனி என்ற பெயரிலும் பிரகாஷ்ராஜ் படமாக எடுத்துள்ளார் 

 

*மதிப்பெண்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் கல்வி கற்பித்தல் தவம் அதற்காகத்தொடர்ந்து கற்பவரே ஆசிரியர் போன்ற பல செய்திகளை அழுத்தமாக அனைவரும் மனங்களிலும் பதிய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கும் படம்"The Teachers Diary"

 

* உலகமெங்கும் தேடல் மிக்கவர்கள் பயணித்துக் கொண்டே இருக்கின்றனர் பயணங்களை வாழ்க்கை ரகசியங்களை அவிழ்கின்றன. புத்தன், இயேசு ,காந்தி ,சோ போன்ற பலரின் வாழ்க்கையை மாற்றியது பயணங்கள் தான் 

 

*அசோக் வாட்கர் என்ற மராத்திய எழுத்தாளரின் பள்ளிப்பருவத்தில் 1950-60 இல் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் அவர் எழுதிய 72 மூல ஒரு ஒரு பயணம் அதன் திரை வடிவமே" 72 மைல்ஸ்" 

 

*இடையறாத முயற்சி மற்றும் அன்பின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ராணியின் கதையை சாட்சி 

 

*ஒரு சினிமாவைப் போல முடிவு இருந்தாலும் அமெரிக்காவின் சிறந்த ஆசிரியர்களுள்  ஒருவரான ரான் கிளார்க் என்ற ஆசிரியரின் வாழ்க்கை நிகழ்வுகளை மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட படம்"The Ron Clark story"

 

 *மாற்றங்களை விரும்புபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க தயாராகவும் இருக்க வேண்டும் எவ்வளவு தான் அடக்குமுறைகள் இருந்தாலும் கற்பித்தலில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தன் பணியை தொடருவார்கள் .அவர்களிடமே மானுடத்தின்  எதிர்காலம் ஆக்கம் பெறுகிறது 

 

*Tom schulman  தனது பள்ளி வாழ்விலிருந்து எழுதிய கதைகளை பீட்டர் வயர் இயக்கி உள்ளார் 1989 இல் எடுக்கப்பட்ட படத்தில் Robin William ஆசிரியராக நடத்து உள்ளார் 

 

*பல்வேறு விருதுகளை குவித்த இந்தப் படம் இன்றளவும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாக விளங்கி வருகிறது.

 

  *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments